புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வீதத்தைக் குறைத்த பின்னர், ஸ்டேட் வங்கியும் வாடிக்கையாளர்கள் கடன் வாங்குவதை எளிதாக்கியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கியும் நிதி அடிப்படையிலான கடன் (MCLR) விகிதங்களை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இந்த புதிய விகிதம் அக்டோபர் 10 முதல் அமல் செய்யப்படும். வீடு, வாகனம் மற்றும் தனிநபர் லோன்கள் வாங்க நினைத்தால் மலிவான விலையில் கடன் கிடைக்கும்.
அக்டோபர் 4 ஆம் தேதி ரெப்போ வீதம் குறைக்கப்பட்டது:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த பரிசை வழங்கியுள்ளது. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதக் குறைப்பின் பலன் கிடைக்கும். முன்னதாக அக்டோபர் 4 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. அதாவது ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கியது:
திருவிழாவின் போது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எம்.சி.எல்.ஆர் விகிதங்களை 0.10 சதவீதம் குறைத்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. புதிய எம்.சி.எல்.ஆர் விகிதங்கள் 8.15 சதவீதத்திலிருந்து 8.05 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த சலுகை ஒரு வருடத்திற்கு பொருத்தும். நடப்பு நிதியாண்டில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக வங்கி வட்டி வீதங்களை எஸ்பிஐ குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை குறைத்த பின்னர், எஸ்பிஐ வங்கியும் எம்சிஎல்ஆரின் அடிப்படையில் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இப்போது EMI ஒவ்வொரு மாதமும் 0.10% மலிவாகிவிட்டது. இந்த வட்டி குறைப்பு புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமில்லை, 2016 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கடன் வாங்கிய வாடிக்கையாளர்களும் பொருந்தும்.