மக்கள் தொகை கட்டுப்பாடு; உத்திர பிரதேச முதல்வர் விரைவில் முக்கிய அறிவிப்பு

அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வகையில் வசதிகளை வழங்க மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) அவசியம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2021, 03:16 PM IST
  • சிறு குடும்பமே வளமான குடும்பத்திற்கான அடிப்படை.
  • மக்கள் தொகை பெருக்கம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பு கவனம்
மக்கள் தொகை கட்டுப்பாடு; உத்திர பிரதேச முதல்வர் விரைவில் முக்கிய அறிவிப்பு title=

லக்னோ: அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வகையில் வசதிகளை வழங்க மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) அவசியம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் மக்கள்தொகையை  கடுப்படுத்த உத்தர பிரதேச அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.  2021-30  ஆண்டுகளுக்கான புதிய மக்கள் தொகைக் கொள்கையை (New Population Policy 2021-30)  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  (Yogi Adityanath) மக்கள் தொகை தினத்தன்று ஜூலை 11 அன்று வெளியிடுவார்.

லக்னோவில் உத்தரப்பிரதேச மக்கள்தொகை கொள்கை 2021-30 தொடர்பாக மறுஆய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  (Yogi Adityanath), அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்க மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று முதல்வர் கூறினார். மக்கள் தொகை கட்டுப்பாடு உத்திர பிரதேசத்தை சிறப்பான மாநிலமாக ஆக்கும் கனவை  நனவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

ALSO READ | தனது தளத்தில் போடப்படும் பதிவுகளுக்கு பேஸ்புக் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

சிறு குடும்பமே வளமான குடும்பத்திற்கான அடிப்படை என்று கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த புதிய கொள்கையில், மக்கள் தொகை பெருக்கம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறப்பு கவனம்  செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். ஒரு சிறிய குடும்பம் வளமான குடும்பத்திற்கான அடிப்படை என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று முதல்வர் கூறினார். இதன் மூலம் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

2021-30  ஆண்டிற்கான புதிய மக்கள்தொகை கொள்கை இன் கீழ், 2021 மற்றும் 2030 க்கு இடையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ்  மக்கள் கருத்தடை செய்து கொள்ளவதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டு, பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகை விகிதத்தை சமாளிப்பதோடு, மேம்பட்ட சுகாதார வசதிகள் மூலம் பிறந்த குழந்தை மற்றும் தாய் இறப்புகளைக் குறைப்பதற்கும், கருவுறாமை பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். புதிய கொள்கையில் உள்ள ஒரு முக்கியமான முன்மொழிவு 11 முதல் 19 வயதுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கை தவிர முதியோரின் பராமரிப்பிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்வதாகும்.

உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) அதிகரித்து வரும் மக்கள் தொகையைத் தடுப்பதற்கான சட்ட வாரைவை , மாநில சட்ட ஆணையம் ஒரு சட்ட வரைவை பரிசீலித்து வருகிறது.  இந்த வரைவு தயாரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் ஆணையக் குழுவின் பரிந்துரைகளாக இருக்கும், அது அவற்றை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யும்.

ALSO READ | அமைச்சர்கள் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தவும்: பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News