"சதுரங்கவேட்டை 2" படத்தின் சிங்கள் ட்ராக் இன்று வெளியீடு!

Last Updated : Aug 21, 2017, 01:23 PM IST
"சதுரங்கவேட்டை 2" படத்தின் சிங்கள் ட்ராக் இன்று வெளியீடு! title=

சதுரங்கவேட்டை 2 படத்தின் சிங்கள் ட்ராக் இன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து வெளிவரும் படம் சதுரங்கவேட்டை 2

நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் சதுரங்க வேட்டை. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படம் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 படத்தின் பணிகள் துவங்கப்பட்டன. 

இப்படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். மனோபாலா தயாரிக்க இருக்கிறார்.

 

 

இந்நிலையில் தற்போது சதுரங்க வேட்டை 2 பட்டத்தின் சிங்கள் ட்ராக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக  உள்ளது. ஹிப்ஹோப் ஆதி இதனை வெளியிடுகிறார்.

Trending News