அல்லு அர்ஜுன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான புஷ்பா-2 வசூல் ரீதியாக அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றது.
பான் இந்தியா ரிலீஸாக வெளியான இப்படம் இந்தி வெர்சனிலும் கணிசமான வசூலைப் பெற்றது. சுகுமார் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது. முதல் பாகத்தைவிட இதில் ஆக்ஷன் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலாக மிரட்ட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கெனவெ எழுதப்பட்ட திரைக்கதையில் இதற்காக சில மாற்றங்களும் தற்போது செய்யப்பட்டுவருகிறதாம்.
இதனால் இப்படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க ரிலீஸுக்குப் பின்பான இப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றுவது தொடர்பாக 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
முதல் பாகத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியது. அதனால் இப்படத்தையும் அதுவே வாங்கும் எனக் கூறப்பட்டுவந்தது. ஆனால் மற்றொரு பிரபல ஓடிடி நிறுவனமான டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனமும் இப்படத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாம்.
மேலும் படிக்க | VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!
இரு நிறுவனங்களும் பெரும் தொகை கொடுத்து இதனை வாங்கத் தயாராக உள்ளனவாம். இதனால் புஷ்பா- 2 வை எந்த நிறுவனம் கைப்பற்றப்போகிறது எனும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. அநேகமாக படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ‘KGF-3’: திடீரென மறுத்த படக்குழு- குழப்பத்தில் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR