கூப்பிட்ட பெண், ஓடோடி வந்த எருமை: இதயங்களை இளக வைக்கும் வைரல் வீடியோ

Animal Love Video: இதயங்களை இளக வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் முகத்தில் சட்டென்று புன்னகை பூக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 2, 2022, 04:59 PM IST
  • மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு மிகவும் அலாதியானது.
  • இதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
  • இப்போதும் ஒரு அருமையான வீடியோ வெளிவந்துள்ளது.
கூப்பிட்ட பெண், ஓடோடி வந்த எருமை: இதயங்களை இளக வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு மிகவும் அலாதியானது. இதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இப்போதும் ஒரு அருமையான வீடியோ வெளிவந்துள்ளது. ஒரு பெண்ணுக்கும் அவளுடைய எருமைக் குட்டிக்கும் இடையே உள்ள அழகான பந்தத்தின் வீடியோ வைரல் ஆகியுள்ளது. இந்த அழகான பாசம் மிக்க உறவைப் பார்த்தால் இதயம் இனிக்கிறது. இதைப் பார்க்கும் அனைவரின் முகத்திலும் நிச்சயம் புன்னகை பூக்கும். 

எருமைக் கன்று ஒன்று பெண்ணின் குரலைக் கேட்டதும் அவரிடம் ஓடி வருவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. பாசமாக பெண் எருமையைக் கூப்பிடுவதும், ஆசையாக அது பெண்ணை நோக்கி ஓடி வருவதையும் பார்க்க மிக அழகாக உள்ளது. 

வீடியோவில், ஒரு பெண் தனது வீட்டு எருமையை திறந்த வெளியில் மேய்த்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. மேய்ந்துகொண்டே எருமை தூரமாக சென்று விடுகிறது. அந்த பெண் குரல் கொடுத்து எருமையை அழைக்கிறார். பெண்ணின் குரலைக் கேட்டு வெகு தொலைவில் இருந்து ஓடி வரும் காட்சி காண அற்புதமாக உள்ளது. அருகில் வந்த கன்றுக்குட்டியை செல்லமாக பார்க்கும் பெண் பின்னர் கேமராவை பார்த்து சிரிக்கிறார்.

மேலும் படிக்க | கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த குரங்கு: இணையத்தை இளக வைத்த வைரல் வீடியோ 

பெண்ணுக்கும் எருமைக்கும் இடையிலான இனிமையான நட்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். இதுதான் தாங்கள் சமீபத்தில் பார்த்த அழகான விஷயம் என்று பலர் கூறி வருகின்றனர். வாயில்லா ஜீவன்கள் இத்தகைய அன்புக்கு தகுதியானவை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

பெண்ணின் குரலைக் கேட்டு ஓடி வரும் எருமையின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 

இதயத்தை இளகச்செய்யும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ ‘official_altani’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 300k வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

"நான் உங்கள் கிராமத்திற்கு நிச்சயமாக வர விரும்புகிறேன்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "எங்கள் அனைவருக்கும் இந்த வீடியோ மிகவும் பிடித்துள்ளது. இது மிகவும் அழகான வீடியோ" என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். "விலங்குகள் மிகவும் பாசமானவை. அவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை" என்று மற்றொருவர் எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | ரெக்க கட்டி பறக்குதடி தாத்தாவோட சைக்கிள்: கூல் தாத்தாவின் தூள் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News