செல்ஃபி எடுக்க போய் சிக்கிய நபர்கள்.. துரத்தும் சினம் கொண்ட யானை: திகிலூட்டும் வைரல் வீடியோ

Scary Viral Video: யானையுடன் செல்ஃபி எடுக்க போய் வசமாக மாடிக்கொண்ட நபர்களின் திகிலூட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2023, 02:05 PM IST
  • இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுஷாந்த் நந்தா சமூக ஊடக தளமான ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
  • இது பல பயனர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
செல்ஃபி எடுக்க போய் சிக்கிய நபர்கள்.. துரத்தும் சினம் கொண்ட யானை: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

சமூக ஊடகங்களில் குரங்கு, பாம்பு, யானை, புலி. சிங்கம், நாய் ஆகிய மிருகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இவற்றின் வீடியோகளை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் யானை தாக்குதல்களின் வீடியோக்களும் மிக அதிகமாக பகிரப்படுகின்றன. 

காடுகளில் ஆய்வு செய்வது, சுற்றிப்பார்ப்பதும் மிகவும் சுவாரசியமான சிலிர்ப்பான விஷயமாகும். எனினும், காட்டுக்குள் சென்று இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடும்போது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க, ஒவ்வொருவரும் சில அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டும். வன விலங்குகளின் நடத்தை கணிக்க முடியாததாக இருப்பதால், அவற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது. 

காடுகளுக்கு செல்லும் நபர்களின் கவனக்குறைவால் ஏற்படும் பல விபத்துக்கள் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். இவற்றை பற்றிய பல வீடியோக்களையும் நாம் தினம் தினம் இணையத்தில் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, ஒரு நபர் யானையை நெருங்கி தொந்தரவு செய்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளிவந்தது. அது பிடிக்காமல் யானை கொடுத்த ரியாக்‌ஷனையும் வீடியோவில் நாம் பார்த்தோம். 

தற்போது யானையை தொந்தரவு செய்து சிக்கலில் சிக்கிக்கொண்ட சிலரது வீடியோ, வீடியோ ஒன்று மீண்டும் வெளிவந்துள்ளது. இதை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு அச்சமே மேலோங்குகிறது. 

செல்ஃபி எடுக்க போய் மாட்டிக்கொண்ட நபர்கள் 

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் மூன்று நபர்களை காட்டு யானைகள் துரத்துவதை காண முடிகின்றது. அந்த நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றாலும், இந்த வீடியோ நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வீடியோவில் யானைக்கூட்டம் அவர்களை துரத்துவதையும் மூன்று பேர் சாலையில் ஓடுவதையும் காண முடிகின்றது. யானையிடம் இருந்து தப்பித்து ஓடும்போது, மூன்று பேரில் ஒருவர் தடுமாறி சாலையில் விழுவதையும் காண முடிகின்றது. ஆனால் அவர் உடனடியாக எழுந்து மீண்டும் ஓடத் தொடங்கினார். அந்த நபர்களுக்கு பின்னால் வரும் யானைக்கூடத்தில் முன்னால் வந்துகொண்டிருக்கும் ஒரு யானை அந்த நபர்களை நோக்கி வேகமாக வருவதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | கால்பந்து வைத்து கன்னாபின்னானு மாயம் செய்யும் இளைஞன்: சத்தியமா நம்ப முடியல... வைரல் வீடியோ

மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோ இங்கே காணலாம்: 

சமூக ஊடகங்களில் வீடியோ வைரல் ஆனது

முழு வீடியோ கிடைக்கவில்லை என்றாலும், வீடியோவில் காணப்படும் மூன்று நபர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்தனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இது மிக ஆபத்தான ஒரு விஷயமாக மாறி இருக்கலாம். இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுஷாந்த் நந்தா சமூக ஊடக தளமான ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது பல பயனர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. 

‘செல்ஃபி எடுக்கும் மோகத்தில் சில சமயம் மக்கள் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்வதோடு மட்டுமல்லாமல், ஆபத்துகளிலும் சிக்கிக்கொள்கிறார்கள்’ என வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக ஆபத்தை நோக்கி சென்ற மூவரது முட்டாள்தனத்திற்கு பல இணையவாசிகள்  தங்கள் கோபத்தையும் கடுமையான விமர்சனங்களையும் அளித்துள்ளனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | எப்புட்றா... பெரிய முட்டையை அசால்டாக விழுங்கும் பாம்பு... வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News