தீபாவளியில் மாறும் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி சூப்பர் நெரம், அமோக ராஜயோகம்

Lord Shani: சனியின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 01:45 PM IST
  • சனி பகவானின் இயக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் வீடு, மனை மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
  • வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு.
தீபாவளியில் மாறும் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி சூப்பர் நெரம், அமோக ராஜயோகம் title=

சனி பகவானின் மாற்றம் 2022: சனி பகவான் 23 அக்டோபர் 2022 அன்று தனது வக்ர நிலையில் இருந்து மாறி நேர் இயக்கத்தில் நகரவுள்ளார். சனியின் இந்த மாற்றம் தன்தேரஸ் சுப நாளில் நடக்கவுள்ளது. பொதுவாகவே, தீபாவளி சமயத்தில் கிரகங்களின் நிலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இவ்வாண்டு தீபாவளி நேரத்தில் சனியின் இயக்கம் மாறுவதால் ஏற்படும் பலன் 12 ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் இந்நாளில் சனியின் சஞ்சரிப்பால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் இயக்கம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தந்தேரசில், சனியின் சஞ்சாரம் மாறுவதால், மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வேகம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் இயக்கத்தால் முழுமையான பலன்கள் கிடைக்கும். சனி பகவானின் சஞ்சாரத்தால் உங்களின் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபரில் பண மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளியில் நல்ல செய்தி கிடைக்கும். சனி சஞ்சரிக்கும் போது, ​​திடீர் பண ஆதாயங்களும் கிடைக்கும். தந்தேரசில் தங்கம் வாங்குவது நன்மை தரும். சனி பகவானின் அருளால் இப்போது முதலீட்டிற்கான நல்ல கிரக நிலைகள் அமைந்துள்ளன. இப்போது செய்யப்படும் முதலீட்டின் காரணமாக எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும். 

விருச்சிகம்:

சனி பகவானின் இயக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீடு, மனை மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் தொடர்பான திட்டங்கள் வெற்றி பெறும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் சனி பகவானின் மாற்றத்தால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் பொன்னான வாய்ப்புகளைப் பெறலாம். சனியின் சுப பலன் காரணமாக தடைபட்ட வேலைகள் முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரணமான ஆதரவு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டி போடும் சனி-ராகு-கேது தோஷங்களை நீக்கும் ‘சில’ எளிய பரிகாரங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News