நியூசிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வி பெற்றது!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் ஒருபகுதியாக இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செட்டன் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது.
3rd ODI. It's all over! New Zealand Women win by 8 wickets https://t.co/0pWWx7IlZT #NZvInd #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) February 1, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணி தரப்பில் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ரோட்ரிஜியூஸ் 12(20) மற்றும் ஸ்மிரித்தி மந்தனா 1(7) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுடன் வெளியேறினர். இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா 52(90) ரன்கள் குவிக்க, அவருக்கு துணையாக ஹர்பிரீட் கரூர் 24(40) ரன்கள் குவித்தார், எனினும் ஆட்டத்தின் 44-வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 149 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகள் ஸ்விஸ் பேட்ஸ் 57(64), லேரண் டவுன் 10(19) குவித்து வெளியேற, முதலாம் விக்கெட்டுக்கு களமிறங்கிய எமி ஸெட்டர்வெயிட் 66(74) ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று அணியின் வெற்றியினை உறுதி செய்தார். ஆட்டத்தின் 29.2-வது பந்தில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டிய நியூசிலாந்து தொடரின் முதல் வெற்றியினை பதிவு செய்தது.
எனினும் முன்னதாக நடைப்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.