இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்புவரை சென்று, துர்திஷ்டவசமாக தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை இந்திய அணி வீரர்களே எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடைசி விக்கெட்டுக்கு வங்கதேச அணி 50 ரன்களுக்கு மேலாக சேர்த்து, சிறப்பான வெற்றியை பெற்றது. வங்கதேச அணியின் இந்த வெற்றிக்கு இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும் ஒரு காரணம்.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மெஹடி ஹசன் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் கோட்டைவிட்டார். அப்போதே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பெரும் அப்செட்டானார்கள். ராகுல் கேட்ச் விட்டத்தை வீரர்கள் மட்டுமல்ல மைதானத்தில் இருந்த ரசிகர்களால்கூட நம்பமுடியவில்லை. அப்போதே இந்திய அணி சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால் மேட்சை விலை கொடுக்க வேண்டியிருந்தது. வாஷிங்டன் சுந்தரும் கேட்ச் ஒன்றை மிஸ் செய்தார்.
இதற்காக இந்திய அணி ரசிகர்கள் கடுமையாக சாடினார். வாஷிங்டன் சுந்தரையும், கே.ராகுலையும் ரசிகர்கள் விமர்சித்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் ஆதரவாக பேசியுள்ளார். அவர் பேசும்போது, இந்திய அணியின் பீல்டிங் 50-50 தான். அவர்கள் கேட்ச் விட்டதற்கு வெளிச்சம் காரணமா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் பிடித்திருக்க வேண்டும். போட்டியின் இறுதியில் சில பவுண்டரிகள் விட்டதும் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்த பிளேயருக்கு வாய்ப்பு கொடுங்க ரோகித்! முன்னாள் வீரர்கள் அட்வைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ