தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து கிட்டத்தட்ட 40 ஓவர்கள் விக்கெட் இழப்பின்றி விளையாடினார்.
ALSO READ | பாக்சிங்டே-வில் இந்தியா பதிவு செய்த 3 பிரம்மாண்ட வெற்றிகள்..!
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் அரை சதம் அடித்தார். அதன்பிறகு களமிறங்கிய புஜாரா முதல் பந்திலேயே துரதிஸ்டவசமாக அவுட்டாகி வெளியேறினார். 100 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. பின்பு களமிறங்கிய கேப்டன் கோலி நிதானமாக ஆடினார். இன்று சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
A phenomenal century by @klrahul11 here at the SuperSport Park.
This is his 7th Test ton #SAvIND pic.twitter.com/mQ4Rfnd8UX
— BCCI (@BCCI) December 26, 2021
பொறுப்புடன் ஆடிய கே எல் ராகுல் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். 14 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் தற்போது 110 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் உள்ளார். மறுபுறம் அஜிங்கிய ரஹானே அதிரடியாக விளையாடி வருகிறார். தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி இந்திய அணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதேபோல் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை அடிக்க வாய்ப்பு உள்ளது.
ALSO READ | சில சமயங்களில் வீரர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்: ராகுல் டிராவிட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR