இந்தியா - ஆஸ்., அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 12 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியலினை ICC வெளியிட்டுள்ளது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளயாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் துவங்குகிறது.
நாளை காலை 5.30 மணியளவில் அடிலெட் ஓவல் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் பங்கேற்கும் வீர்களின் பட்டியலினை ICC அறிவித்துள்ளது. இப்பட்டியலின் படி இந்திய அணியில் விளையாடும் வீரர்கள்...
India have announced their 12 for the first #AUSvIND Test!
Kohli (c), Rahane, Rahul, Vijay, Pujara, Rohit, Vihari, Pant, Ashwin, Shami, Ishant, Bumrah.
Who will be the one to miss out? pic.twitter.com/edElklldN9
— ICC (@ICC) December 5, 2018
முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதுஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹனே, ரோஹித் ஷர்மா, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் களமிறங்கும் வீரர்கள்... மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹன்ட்ஸ்காம், டிராவிஸ் ஹெட், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹாஸ்லேவுட், நாதன் லியோன் என அறிவிக்கப்பட்டள்ளது.