டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் யார்? கசிந்த தகவல்

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, டி 20 வடிவத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 20, 2021, 05:29 PM IST
  • இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார்.
  • துணை கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுலிடம் ஒப்படைக்கலாம்.
  • வார்ம்-அப் போட்டியில் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா.
டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் யார்? கசிந்த தகவல் title=

புது டெல்லி: ஒரு கேப்டனாக விராட் கோலிக்கு ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 (ICC T20 World Cup 2021) கடைசி தொடராகும். இந்த மெகா தொடருக்கு பிறகு, விராட் கோலி டி 20 வடிவத்தின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார். விராட் கோலி ஏற்கனவே தனது ராஜினாமாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, அதாவது பிசிசிஐக்கு சமர்ப்பித்துள்ளார். டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் வரை, அவர் அணியின் கேப்டனாக இருப்பார் மற்றும் டி 20 உலகக் கோப்பை 2021 தொடர் முடிந்தவுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார். ஆனால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார். தற்போது கேள்வி டி 20 இந்திய அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்பது தான். பல யூகங்கள் நிலவி வரும் வேளையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற படம் தெளிவாகிவிட்டது.

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, டி 20 வடிவத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இன்சைட்ஸ் ஸ்போர்ட்டிடம் (InsideSport,) பேசிய பிசிசிஐ அதிகாரி, "உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 வடிவத்தின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார். ஆனால் அது ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 தொடருக்கு பிறகு அறிவிக்கப்படும்" என்றார். 

ரோஹித் சர்மா (Rohit Sharma) தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவருக்கு பதிலாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் டி 20 வடிவத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுலிடம் ஒப்படைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. ராகுல், முன்பு துணை கேப்டனாக இருந்துள்ளார்.

ஐபிஎல் 2020-க்கு பிறகு காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு செல்லாதபோது, ​​கேஎல் ராகுல் அவருக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட ஓவர்களுக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ |  IND vs AUS Warm up Match: யாருக்கு எந்த இடம்? பேட்டிங் ஆர்டர் முடிவு செய்யப்படும்

இத்தகைய சூழ்நிலையில், கேஎல் ராகுலுக்கு துணை கேப்டன் வழங்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. இருப்பினும், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இருப்பதால், அவர் விக்கெட் பின்னால் இருந்து சில முடிவுகளை எடுக்க அணிக்கு உதவ முடியும். கேஎல் ராகுலும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஆனால் ரிஷப் பந்த் அணியில் விளையாடும் போது, ​​கேஎல் ராகுல் களத்தில் இருப்பார் எனத் தெரிகிறது. 

அதுமட்டுமில்லாமல் இன்று நடைபெறும் ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி வார்ம்-அப் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணியை கேப்டனாக ரோகித் சர்மா வழிநடத்துவார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை கேப்டன் விராட்  வழிநடத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ |  நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News