உலகளவில் விளையாட்டு காலெண்டர்களை தடம் புரட்டியுள்ள கொரோனா வைரஸ். இந்த வளர்ச்சியின் தற்போதைய முன்னேற்றத்தில் பாகிஸ்தான் - வங்கதேசத்திற்கு இடையிலான தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஏற்புட்டு கொரோனா அச்சத்திற்கு மத்தியில் கராச்சியில் நடைபெறவிருக்கும் ஒருநாள் சர்வதேச மற்றும் டெஸ்டை காலவரையின்றி ஒத்திவைக்க பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியங்கள் திங்கள்கிழமை முடிவு செய்துள்ளன.
திட்டமிட்டப்படி., ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவிருந்த ஒருநாள் மற்றும் ஏப்ரல் 5-9 நடைபெறவிருக்கும் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளுக்குகாக வங்கதேச அணி மார்ச் 29 அன்று கராச்சிக்கு வரவிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு கிரிக்கெட தொடர்கள் ரத்து (அ) ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் வங்கதேசம் - பாகிஸ்தான் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Karachi ODI, Test and Pakistan Cup postponedhttps://t.co/TSuInMXEP2 pic.twitter.com/vIF6fztTYp
— PCB Media (@TheRealPCBMedia) March 16, 2020
"ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உறுதிப்பாட்டை நிறைவு செய்வதற்கான எதிர்கால வாய்ப்பை அடையாளம் காண இரு வாரியங்களும் இப்போது இணைந்து செயல்படும்" என்று இதுதொடர்பான அறிக்கையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவத்துள்ளது.
முன்னதாக இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் பிப்ரவரி 7-10 முதல் ராவல்பிண்டியில் நடைபெற்றது, இந்த போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி மார்ச் 24 முதல் தொடங்கவிருந்த பாகிஸ்தான் கோப்பை ஒருநாள் போட்டிகளும் (PCB) காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் நடைபெறவிருந்த IPL 2020 தொடர் மற்றும் பகுதியளவு நிறைவடைந்த சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் என இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.