புது டெல்லி: T 20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவில் சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் திங்களன்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை வெளியிட்டார், இந்திய முஸ்லிம்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் போட்டியின் போது தனது நாட்டுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.
ALSO READ | ரோஹித்தை அணியில் இருந்து நீக்க வேண்டுமா? கோலியின் பதில்!
"இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாத்தின் வெற்றி. உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இதனால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்," என்று அவர் ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.
Sheikh Rasheed describes #Pakistan’s victory against India in the #T20WorldCup match as a "victory of Islam", and, he is a minister
Comparing sports with religion.??
Chill, congratulate your boys, it's just a cricket match that you've won after yrs @TarekFatah @kakar_harsha pic.twitter.com/Apb7H4PAg1
— Sajeda Akhtar (@Sajeda_Akhtar) October 25, 2021
ALSO READ | முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம்
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடின. அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விளையாடுவதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஐசிசி நடத்தும் விளையாட்டில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR