புது தில்லி: உலக பூப்பந்து சாம்பியனான பி.வி.சிந்து (PV Sindhu) செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்துடன் தனக்கு எந்தவிதமான பிளவுகளும் இல்லை என்று தனது கருத்தை தெளிவு படுத்தினார். மேலும் தனது ஊட்டச்சத்து மற்றும் ரெகவரி தேவைகளுக்காகத்தான் தான் லண்டன் சென்றுள்ளதாகவும் கூறினார்.
ஒரு சமூக ஊடக இடுகையில், 25 வயதான அவர் தேசிய பயிற்சியாளரான புல்லேலா கோபிசந்துடனோ (Pullela Gopichand) அல்லது ஹைதராபாத்தில் உள்ள அவரது அகாடமியுடனோ தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார். கோபிசந்தின் அகாடமியில் தற்போது தேசிய முகாம் நடந்து வருகிறது.
"GSSI உடனான எனது ஊட்டச்சத்து மற்றும் மீட்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நான் சில நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு வந்தேன். நான் எனது பெற்றோரின் சம்மதத்துடன் இங்கு வந்துள்ளேன். நிச்சயமாக இந்த விஷயத்தில் குடும்ப விரிசல்கள் எதுவும் இல்லை” என்று அவர் தனது சமூக ஊடக அகௌண்டுகளில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
I came to London a few days back to work on my nutrtion and recovery needs with GSSI. Infact I have come here with the consent of my parents and absolutely they were no family rifts in this regard. pic.twitter.com/zQb81XnP88
— Pvsindhu (@Pvsindhu1) October 20, 2020
ALSO READ: IPL 2020: தோனியின் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்; ரசிகர்கள் அதிர்ச்சி!
"எனக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த எனது பெற்றோருடன் எனக்கு எப்படி பிரச்சினைகள் இருக்கும்? எங்களுடையது மிகவும் நெருக்கமாக பின்னப்பட்ட குடும்பம். என் பெற்றோர் எப்போதும் என்னை ஆதரிப்பார்கள். நான் தினமும் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மேலும் எனது பயிற்சியாளர் திரு கோபிசந்த் அல்லது அகாடமியில் உள்ள பயிற்சி வசதிகளின் பேரில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.
அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் அவர் இங்கிலாந்து சென்றதாக ஊடக அறிக்கைகள் வந்ததை அடுத்து அவரது இந்த அறிக்கை வந்துள்ளது. ஒலிம்பிக்கில் (Olympic) வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, தவறான செய்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அச்சுறுத்தினார்.
முன்னதாக, கேடோரேட் விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் ரெபேக்கா ராண்டலுடன் சிந்து ஒரு படத்தை பகிர்ந்திருந்தார். "இங்கிலாந்தில் இருப்பதற்கும், ரெபேக்கா ராண்டலுடன் எனது ஊட்டச்சத்து மற்றும் மீட்பு குறித்து அடுத்த சில வாரங்களில் GSSI உடன் பணிபுரிவதற்கும் மகிழ்ச்சி. ஆசியா சுற்றுப்பயணத்தின் மூன்று மாதங்கள்… நான் என் விளையாட்டில் கவனம் செலுத்தி என்னை மேம்படுத்திக் கொள்ள இதுதான் சிறந்த வாய்ப்பு!!" என்று அவர் எழுதியிருந்தார்.
ALSO READ: