விராட் கோலி (Virat Kholi) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஒருமுறைகூட தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்ற வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் இருக்கின்றனர்.
ALSO READ | ரஹானேவுக்கு ’செக்’ வைத்த கே.எல்.ராகுல்..!
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றுவிதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீரர்களுடன் கலந்துரையாடிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக நல்ல மனநிலையுடன், சூழ்நிலையை புரிந்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு 6 நாட்கள் இருந்தாலும், முதல் 3 நாட்கள் நேர்மறையான எண்ணத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும், பயிற்சியில் இருக்கும்போது நல்ல பாசிட்டிவான எனர்ஜியை உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என வீரர்களுக்கு டிராவிட் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யர் பேசும்போது, இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் பயிற்சியின்போது மிகச்சிறப்பாக பந்துவீசுவதாக தெரிவித்துள்ளார். முகமது ஷமி, பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் கூட்டணி மிரட்டலாக இருப்பதாக தெரிவித்த அவர், பும்ரா வேறலெவலில் பந்துவீசுவதாக குறிப்பிட்டு பேசினார். இதே ஃபார்ம் மைதானத்திலும் இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஸ்ரேயாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | மும்பை அணியை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சீவ் கோயங்கா
இஷாந்த் ஷர்மா பேசும்போது, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு பயணங்களில் இந்திய வீரர்களின் பேட்டிங் எப்போதும் சிறப்பாக இருந்துள்ளது. இந்தமுறையும் அது தொடரும் என நம்புவதாக கூறிய அவர், திறமைகள் ஒருங்கிணைந்து வெளிப்படும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR