Tokyo Olympic 2020 Opening Ceremony: டோக்கியோ 2020 ஒலிம்பிக் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பானின் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகளாவிய COVID-19 தொற்றுநோய் காரணமாக ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடங்கத் தயாராக உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020 கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில்தான் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் இருத்த பலருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டிருப்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. தற்போது வரை 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் இடையில், தொடக்க விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் ஜப்பான் உறுதியாக உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடக்க விழா எங்கே நடக்கும்?
டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும்.
ALSO READ | Tokyo Olympics: வில்வித்தை ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி 9வது இடம்
தொடக்க விழாவை இந்தியாவில் பார்வையாளர்கள் எந்த நேரத்தில் பார்க்கலாம்?
டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழா உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு, இந்திய நேரப்படி 2021 ஜூலை 23 அன்று மாலை 4:30 மணிக்கு பார்க்கலாம்.
இந்தியாவில் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா நேரடி ஸ்ட்ரீமை எங்கே பார்க்க முடியும்?
டோக்கியோ ஒலிம்பிக் 2020 இன் அனைத்து நிகழ்வுகளையும் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்ப சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்குக்கு பிரத்யேக உரிமை உண்டு. சோனி டென் 1 மற்றும் சோனி டென் 2 ஆகியவை ஆங்கில வர்ணனையையும், சோனி டென் 3 இந்தி வர்ணனையையும் கொண்டிருக்கும்.
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவை ஆன்லைனில் சோனிலிவ் மற்றும் சோனி டென் 1, சோனி டென் 2 மற்றும் சோனி டென் 3 சேனல்களைக் கொண்ட ஜியோ டிவி போன்ற தளங்களில் நீங்கள் நேரடியாக ஒளிபரப்பலாம்.
ALSO READ | Holocaust சர்ச்சை: ஒலிம்பிக் போட்டி துவக்கவிழா இயக்குநர் வெளியேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவின் சிறப்பு என்ன?
விளையாட்டு தொடக்க விழாக்களில் பெரும்பாலான நாடுகளின் தங்கள் கலாச்சாரத்தை பிரதிப்பலிக்கும் வகையில் பிரமாண்டமாகக் கொண்டாடுவார்கள். அதேபோல இன்றைய டோக்கியோ ஒலிம்பிக் 2020-ன் தொடக்க விழாவில் ஜப்பானிய கலாச்சாரம் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR