Fitness: எடையை குறைத்து உடற்தகுதி இலக்கை எட்டிய ரோஹித் சர்மா!

 ஒயிட்-பால் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது தனது உடல் பருமனை வெகுவாக குறைத்துள்ளார்... இந்த புகைப்படங்கள் வைரலாகின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2022, 08:15 AM IST
  • ரோஹித் ஷர்மாவின் புதிய அவதாரம்
  • எடை குறைத்த ரோஹித்தின் ஃபிட்டான தோற்றம்
  • மேற்கத்திய தீவுகளுக்கான போட்டிக்கு தயாரான ரோஹித் ஷர்மா
Fitness: எடையை குறைத்து உடற்தகுதி இலக்கை எட்டிய ரோஹித் சர்மா! title=

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர் ரோஹித் ஷர்மாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன. அவர் கணிசமான எடையை குறைத்திருப்பது போல் தெரிகிறது. இது களத்தில் அவரது சுறுசுறுப்பு மற்றும் இயக்கத்திற்கு உதவும்.
 
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் ஒயிட்-பால் கேப்டனான ரோஹித் ஷர்மா, தனது  உடற்தகுதி குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டுவந்தார்.  

உலகின் மிகச் சிறந்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் பேட்டர்களில் ஒருவரான (Best Cricketer) ரோஹித் ஷர்மாவின் திறமை மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது.  
ஆனால் அவரது கிரிக்கெட் பயணத்தில் காயங்கள் அவரிமீண்டும் மீண்டும் காயப்படுத்தி வருவது கவலையளிப்பது.

ALSO READ |  பிரெண்டன் டெய்லர் மேட்ச் பிக்ஸிங் புகார்

காயம் காரணமாக ரோஹித் ஷர்மாவால் தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல முடியவில்லை, மேலும் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது. இதற்கான விலை தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலிக்கிறது. 

ரோஹித் கணிசமான எடையை குறைத்திருப்பது போல் தெரிகிறது, இது களத்தில் அவரது சுறுசுறுப்புக்கு உதவும். அவருடைய முந்தைய படங்களைப் பார்த்தால், சமீபத்தில் அவர் தன்மய் மிஷாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் (Social Media) ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் ரோஹித்தின் புதிய அவதாரம் தெரிகிறது.

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித்தொடருக்கு முன்னதாக அணிக்கு பொறுப்பேற்க உள்ள ரோஹித் ஷர்மா, தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக காணப்படுகிறார். 

ALSO READ | 2021ஆம் ஆண்டுக்கான ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) ரோஹித்தின் பயிற்சிகள் சிறப்பாக நடந்து வருகிறது. அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாட தகுதி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக அவர் முழு உடற்தகுதியை பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 சர்வதேச போட்டிகள் உள்ளன. ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6 முதல் 12 வரையிலும், டி20 போட்டிகள் பிப்ரவரி 15 முதல் 20 வரையிலும் நடைபெறும்.

ALSO READ | விராட் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டாமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News