வெற்றி... வெற்றி... வெளிநாட்டு பயணம் வெற்றி...: தமிழக முதல்வர் உற்சாகம்

வெளிநாட்டு பயணம் வெற்றிக்கரமாக முடிந்தது. எங்கள் பயணம் தொடரும். தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 10, 2019, 08:38 AM IST
வெற்றி... வெற்றி... வெளிநாட்டு பயணம் வெற்றி...: தமிழக முதல்வர் உற்சாகம் title=

சென்னை: 14 நாட்களின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிகாலை தமிழகம் திரும்பினார். அப்பொழுது அவர், வெளிநாட்டு பயணம் வெற்றிக்கரமாக முடிந்தது. எங்கள் பயணம் தொடரும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து வெளிநாடு புறப்பட்டு சென்றார். முதலில் இங்கிலாந்து சென்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், நேற்று துபாயில் சென்றார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 15 பேர் கொண்ட குழுவும் சென்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அந்தந்த நாட்டின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்ப்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

நேற்று துபாயில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குழு, அங்கு பல்வேறு தொழில் நிறுவனத்தினரை சந்தித்து பேசினார். மேலும் தொழில் முதலீட்டாளர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிச்சாமி உரையாற்றினார். மேலும் பல்வேறு தொழில் நிறுவனத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட விருப்பம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேற்று தனது 14 நாட்களின் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குழு, இன்று அதிகாலை தாயகம் திரும்பினார்கள். தமிழகம் திரும்பிய முதல்வருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்ப்பை அளித்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், வெளிநாட்டு பயணம் வெற்றிக்கரமாக முடிந்தது. எங்கள் பயணம் தொடரும். தமிழ்நாட்டில் தொழில் துவங்கிடவும், முதலீடு செய்ய பலரும் விருப்பம் தெரிவித்தனர். தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News