உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: எல்.முருகன்

கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2021, 10:01 AM IST
உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: எல்.முருகன் title=

கொரோனாவால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,

கொரோனா (Coronavirus) தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin). கடந்த ஆட்சியிலும் கூட இதே ரூ.25 லட்சம் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஏதோ அதிகப்படுத்தியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ALSO READ | உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடந்த வருடம் ஏப்ரல் 15 ஆ தேதியில் திமுக உள்ளிட்ட  11 கூட்டணி கட்சியினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் உயர்வுகள் வழங்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது. 

அத்துடன் கடந்த ஆண்டு அதிமுக அரசு முன்களப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை செய்த போது கடுமையாக எதிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றி பேசுவது அழகல்ல. ஆகவே உடனடியாக முதல்-அமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News