சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu) வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சில குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் நுழைந்ததாகவும் தகவல்கள் கிடைத்தன.
Tamil Nadu: Rain lashes parts of Chennai; water enters residential areas.
India Meteorological Department (IMD) predicted 'generally cloudy sky with heavy rain' in the city today. pic.twitter.com/bv3SsYw5c2
— ANI (@ANI) October 29, 2020
#WATCH: Rainfall triggers water logging in parts of Chennai, Tamil Nadu.
India Meteorological Department (IMD) predicted 'generally cloudy sky with heavy rain' in the city today. pic.twitter.com/JteRf3FojW
— ANI (@ANI) October 29, 2020
ALSO READ: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது: வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
சென்னை (Chennai) நகரில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகர மக்களை இன்று உரத்த இடியும் பிரகாசமான மின்னலும் தான் தூக்கத்திலிருந்து எழுப்பின என்றே கூறலாம்.
தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் தென் பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழையின் (Monsoon) வருகையை IMD நேற்று உறுதிப்படுத்தியது.
சென்னையில் பெய்து வரும் பேய் மழையால் ஒரு புறம் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபுறம் இதற்கு முன்னர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அச்சமும் மக்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. வீடுகளில் மழை நீர் புகும் அளவிற்கு மழை பெய்து வருவதால் இந்த அச்சம் இன்னும் அதிகமாகிறது. எனினும், அப்படிப்பட்ட அபாயத்திற்கான எச்சரிக்கை எதையும் இதுவரை IMD வெளியிடவில்லை.
ALSO READ: 2021-ஆம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் ஐ வெளியிட்ட தமிழக அரசு..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR