பேரூராட்சி அலுவலகம் வாயிற்கதவை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்: என்ன நடந்தது?

கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்திய அவசரக் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகம் வாயிற்கதவை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 16, 2024, 02:02 PM IST
  • கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் நடத்திய அவசரக் கூட்டம்.
  • கடுப்பான கவுன்சிலர்கள்.
  • வாயிற்கதவை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்.
பேரூராட்சி அலுவலகம் வாயிற்கதவை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்: என்ன நடந்தது? title=

பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும் துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பத்துக்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் கதவை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் யார்? இன்று காலையில் நடந்த கூட்டத்தில் என்ன நடந்ததூ? இங்கெ விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | Zee News கருத்துக்கணிப்பு: தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்கள்...? பாஜகவுக்கு வாய்ப்பிருக்கா?

என்ன நடந்தது?

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இது 21 வார்டுகள் உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தலைவராக உள்ளார். துணை தலைவராக கிருஷ்ணவேணி பதவி வகித்து வருகிறார். இதில் ஏடிஎம்கே, காங்கிரஸ், சுயேச்சை என மூன்று கவுன்சிலர்கள் உள்ளனர். 

இன்று பேரூராட்சியில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முறையாக கவுன்சிலர்களுக்கு அஜண்டா அனுப்பாமல் புறக்கணித்ததாக கூறி கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் பூட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கையெழுத்துக்களை போலியாக போட்டதாகவும், அதன் பின்னர் மீண்டும் அழித்து விட்டதாகவும் கூறி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை தேர்தல் அறிவிப்பு வரவுள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உயிரை பறித்த போட்டோ ஷூட் மாேகம்! கழிவுநீர் குட்டையில் விழுந்த இளைஞர் சாவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News