நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அவரது குடும்பம் ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ்த் திரைத்துறையினர் சார்பாக தமிழக அரசுக்கு நன்றி என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.
கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே நடிகர்திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாளான அக்.1 ம் தேதியை இனி ஒவ்வொறு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.தமிழக அரசுக்கு நன்றி !
- #தென்னிந்திய நடிகர் சங்கம் #SIAA #nadigarsangam pic.twitter.com/IcqMMeFrla— NadigarSangam PrNews (@NadigarsangamP) June 29, 2018
முன்னதாக நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.