இப்படியா விமர்சிப்பது? அண்ணாமலைக்கு காட்டமாக பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி

மின்சாரத்துறையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரைவேக்காடு என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:36 AM IST
  • அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
  • டிவிட்டரில் கடும் விமர்சனம் செய்துள்ளார் செந்தில் பாலாஜி
  • பிஜிஆர் நிறுவனத்துக்கு அதிமுக டெண்டர் கொடுத்ததாக விளக்கம்
இப்படியா விமர்சிப்பது? அண்ணாமலைக்கு காட்டமாக பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி title=

கடந்த சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முறைகேடு புகார்களை அடுக்கி வருகிறார். மின்சாரத்துறையின் ரூ.4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் ஊழியர் போல் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதனை நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்திருந்தார்.

மேலும் படிக்க | TN Budget 2022: தி.மு.க.வின் வாக்குறுதியும் - இன்றைய பட்ஜெட்டும்

இந்த கெடுவுக்கு பதிலளித்த அண்ணாமலை, எனக்கு கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா? என கேட்டதுடன், நாமக்கல் இருளப்பாளையத்தில் நிறுவனம் ஒன்று மின்வாரியத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அமைச்சரின் உறவினர் என்பதால், அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை செந்தில் பாலாஜி தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.  

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, மின்வாரிய டெண்டரில் சிலருக்கு சாதகமாக செயல்படுவது, முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களில் சோதனை நடத்தாமல் தடுப்பது, அதற்காக மாதம் பணம் வாங்கிக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | மேலும் படிக்க: தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?

இதற்காக காவல்துறையைவிட்டு தன்மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பிஜிஆர் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் டெண்டர் எடுத்திருப்பதாக கூறியுள்ளார். 13,700 நாட்களில் 20,000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும், அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News