TN Budget 2022: தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

தமிழக நிதியமைச்சரின் இன்றைய பட்ஜெட் தாக்கல் திருக்குறளுடன் தொடங்கியது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 18, 2022, 12:01 PM IST
  • வருவாய்ப் பற்றாக்குறை 3.80 சதவீதமாக குறைவு
  • சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையில் உறுதி
  • தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழக அரசுக்கு உண்டு
TN Budget 2022: தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் title=

சென்னை: தமிழக நிதியமைச்சரின் இன்றைய பட்ஜெட் தாக்கல் திருக்குறளுடன் தொடங்கியது. 

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து 

என்ற திருக்குறளுடன் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தொடங்கியது.

தமிழக பட்ஜெட் உலகளவில் சென்றடைய வசதியாக சில பத்திகளை ஆங்கிலத்தில் வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். உலகளவில் தொழில்களை ஈர்க்க இது உதவும் என விளக்கம் அளித்தார்.

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்ற குறளின் விளக்கத்தை கூறிய நிதியமைச்சர், தனது இரண்டாவது வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்தார்.

2014 ஆம் ஆண்டு முதல், அதிகரித்து வந்த வருவாய்ப் பற்றாக்குறை, முதன்முறையாக 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்

சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பது,  உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் தமிழர் நாகரிகமும் ஒன்று என்பதை உறுதி செய்தது என்றும்,  தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். 

ஒன்றிய மாநில நிதி உறவுகள், தரவு அடிப்படையிலான மேலாண்மை(Data Centric Governance),உள்தணிக்கை அமைப்புகளை சீரமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். 

அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பற்றி குறிப்பிட்ட நிதியமைச்சர், முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாட்டையும் தலைமைப் பண்பையும் மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரித்துள்ளனர் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியிருப்பதாக கூறினார்.

மேலும் படிக்க | Budget 2022: அதிமுக அரசின் கடன் சுமையும், பட்ஜெட் தாக்கலின்போது வெளிநடப்பும்

இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு என்றும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றன. என்பதை தமிழக நிதியமைச்சர் பதிவு செய்தார்.

உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியையும்
(demand shocks), உலகளாவிய அளிப்பில் பாதிப்புகளையும் (global supply disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இப்படி பல்வேறு விஷயங்களைக் கருத்தில்கொண்டு, 2022-23 வரவு-செலவுத் திட்டத்தில் நிதி முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் குறிப்பிட்டர்.  

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் விதமாக இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.  

வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்., சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல் போன்ற விஷயங்கள் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதிசெய்தல்  ஆகியவையே இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர். அதன் பிறக்கு பேரவை நிகழ்வு முடிவுற்றன. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

தமிழக பட்ஜெட்டை நேரலையில் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News