யூடியூபர் மாரிதாஸை டிச.23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2021, 08:57 AM IST
  • மதுரையில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.
  • யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யூடியூபர் மாரிதாஸை டிச.23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! title=

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூடியூபரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராக சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.  அதில் "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா எனவும் , தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" எனவும் பதிவிட்டிருந்தார். 

ALSO READ | ஆண்டவனே இல்ல : கதறி அழுத ஜிபி முத்து!

இந்நிலையில் மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியில் உள்ள மாரிதாஸின் வீட்டிற்கு சென்ற புதூர் காவல்துறையினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் கைது செய்து மதுரை புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தனர்.  இதனையடுத்து மாரிதாஸின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினருக்கும் , பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

 

மேலும் மாரிதாஸ் கைது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில், "கருத்து கோட்பாடுகளில் முழுமையாக முரண்படுகிறேன். ஆனால், தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.  மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருக்கிறார்.  நான் எங்க அம்மா, அப்பாவிடம் அன்பாக இருப்பதில் நீங்க எப்படி குறை சொல்வீங்க? அதுபோல்தான், மாரிதாஸ் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது? தம்பி சாட்டை துரைமுருகனையும் வேண்டுமென்றே கைது செய்தார்கள்.  இந்த அரசு எவ்வளவு வன்மமாக இருக்கிறது, என்பது அவனை நான் பிணையில் எடுக்க போராடும்போதுதான் தெரிந்தது" என்று தெரிவித்துள்ளார்.

seeman

இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அதில் யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி மாரிதாஸ் உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ALSO READ | யூடியூபர் மாரிதாஸ் கைது - காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News