புதுடெல்லி: பேஸ்புக் சொந்தமாகிக் கொண்ட வாட்ஸ்அப்-பில் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறது.
வாட்ஸ் அப்-பில் முதலில் மெசேஜிங் ஆப் கொண்டுவர பட்டது, பின்னர் புளூ டிக் வசதி வந்தது, தற்போது சமிபத்தில் வாட்ஸ் அப் சேவையில் புதிதாக வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப்-பில் புதிதாக மற்றொரு சேவை இணையப்படும் என்று தகவல் வெளி வந்துள்ளது. அது என்னவென்ற நீங்கள் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
இனிவரும் அப்டேட்களில் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறுவது, அதனை எடிட் செய்யலாம், முழுமையாக அழித்து விடுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இந்த வசதி வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா பதிப்பு 2.17.1.869-ல் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களை திரும்ப பெறும் ரீவோக் ஆப்ஷன், வாட்ஸ் அப் மெனுவில் இதுவரை வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன் மெனுக்களுடன் இணைக்கப்படலாம் எனவும் தெரிகிறது.