உலகின் முதல் 5ஜி செல்போனான கேலக்ஸி S10-யை சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தென் கொரியாவில் வெளியிட்டுள்ளது.
உலகளவில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 5ஜி இணைய சேவை நடைமுறைக்கு வந்தால் 4ஜி-யைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதையத்து, 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் உலக நாடுகளிடையே போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் 5ஜி சேவையை தென்கொரியா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சேவை இன்று முதல் அந்நாட்டு மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் 5ஜி செல்போனான கேலக்ஸி S10-யை சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடிவமைத்து தென் கொரியாவில் இன்று வெளியிட்டுள்ளது.