இந்தியாவில் TikTok பயன்பாடு குறைந்து வரும் நிலையில் Mitron செயலியின் பயன்பாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் TikTok-ன் மதிப்பீடுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் TikTok கவலைப்படுவதற்கு மற்றொரு காரணமாக புதிய செயலி ஒன்று தலை தூக்கியுள்ளது. ஏப்ரல் 2020-ல் புதிதாக சந்தையில் நுழைந்த இந்த செயலி தற்போது TikTok ராஜியத்தை சிதைக்க காத்திருக்கிறது.
சமீபத்திய தகவல்கள் படி MItron கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்துவிட்டது, மேலும் Google Play Store-ன் முதல் பத்து பிரபலமான செயலிகளின் பட்டியலிலும் இடம்பிடித்து விட்டது. TikTok-க்கு பின்னர் தற்போது தற்போது நாட்டில் அதிகம் விரும்பப்படும் செயலியாக மாறிவிட்டது Mitron.
READ ALSO | தனது Tik Tok வீடியோவுக்கு போதிய அளவு லைக் வராததால் இளைஞர் தற்கொலை..
இந்த செயலியை IIT-ரூர்க்கி முன்னாள் மாணவர் சிவங்க் அகர்வால் மற்றும் அவரது குழுவினர் பெங்களூருவில் உருவாக்கியுள்ளனர். ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கும் இந்த செயலி, ஒரு குறுகிய வீடியோ மற்றும் டிக்டாக்கைப் போன்றே சமூக தள பயன்பாடு கொண்டது. இதன் மூலம் . பயனர்கள் வீடியோக்களை உருவாக்கலாம், திருத்தலாம் மற்றும் பகிரலாம்.
அத்துடன் பயனர்கள் பல நாடுகளின் உள்ள வீடியோக்களை பார்க்க முடியும். இந்த செயலி தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
2.3 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் அளித்த மதிப்பீடுகளின் மூலம் Mitron செயலி-க்கு ஒட்டுமொத்தமாக 4.7 ரேட்டிங் கிடைத்துள்ளது.
இந்த செயலியின் பயன்பாட்டு அமைப்பு டிக்டாக்கை போன்றே உள்ளது. எனினும் "Mitron-ன் நோக்கம் மக்கள், ஒரு புதிய தளத்தில் அனைத்து உள்ளடக்கத்தை அனுபவிக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ளவர்கள் தாங்கள் பதிவிட்ட சிறிய வீடியோக்களைப் பார்த்து மகிழ்வார்கள், அதே நேரத்தில் ஒரு சமூக ஊக்கத்தை உருவாக்கவும் மக்கள் தங்கள் சொந்த வீடியோக்களைப் பகிரவும், இந்த தளம் பயன்பட வேண்டும்” என்பதாகும்.
READ ALSO | ‘நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டிங்க...’; வார்னரை கலாய்க்கும் ஜான்சன்...
டிக்டாக்-கிற்கு இந்தியாவில் எதிர்ப்பு மன நிலை உருவாகியுள்ள நிலையினை மிட்ரோன் தற்போது சரியாக பயன்படுதியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் டிக்டோக்கைத் தடை செய்யக் கோரியுள்ள நிலையில் மிட்ரோன் தனது பயனர்களை தேட துவங்கியுள்ளது. டிக்டாக்குக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிட்ரோனுக்கு இந்தியா ஆதரவாக உள்ளதாக தெரிகிறது.
டிக்டாக்கைப் பொறுத்தவரை, சீனாவுக்கு வெளியே, இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீட்ரோனின் எழுச்சி டிக்டாக் சந்தையினை விரைவில் சிதைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
* மொழியாக்கம் – தெய்வ பிந்தியா