பள்ளி வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், உயிர் பிரியும் முன் பேருந்தை ஓரம் நிறுத்தி குழந்தைகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் செயல் கண்கலங்க செய்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே, குமுளி நோக்கி வந்த அரசு பேருந்து கவி வன சாலை வழியாக வரும் போது, அதனை வழி மறித்து துரத்திய காட்டு யானை; ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை வன பகுதிக்குள் சென்ற பிறகு பேருந்தை எடுத்து விரைந்தனர்.
தேனியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நாயை கயிறு கட்டி ஊர்வலமாகச் அழைத்து சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நூதன முறையில் சிவசேனா கட்சியினர் கோரிக்கை வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை சார்பில் பரிசளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூர்யா, ஏழை மாணவர்களின் போர் குணத்துக்கு தலை வணங்குவதாக உருக்கத்துடன் தெரிவித்தார்.
நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும், அதற்கான திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்றும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தேனி அருகே தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆளுநர் பதவியில் அவரே தொடருவாரா? அல்லது மாற்றப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
சென்னை கொருக்குப்பேட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க சென்ற உறவினருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
3000 இந்திய பெண்களை மிரட்டி நிர்வாணமாக வீடியோ கால் செய்ய வைத்து, இந்திய மக்களிடமே மோசடி செய்து பணம் பறிக்கும் சீனாவின் மோசடி கும்பல் குறித்து நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.