சென்னை அருகே ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காகப் பொதுமக்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டும் பேராசிரியரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுக் குடிநீரை மடை மாற்றி, தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடிய விவகாரம் ஆட்சியர் நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று 47 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை குற்றவியல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கானோர் திரும்பியதால் பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி சாலையில் வந்த பொழுது புதுதோட்டம் பகுதியில் சாலை ஓரம் ஒய்யாரமாக அமர்ந்து சிறுத்தை அமர்ந்திருந்ததை கண்ட சுற்றுலா பயணி நடிகர் லிவிங்ஸ்டன் பேசுவது போல நல்லா போஸ் கொடுக்குது கொய்யால எனா பேசி தங்களது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் மயிலம் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இளைஞர் தலைமுறை தடுமாறும் தலைமுறை என்றும், அதைப் பக்குவப்படுத்துவது நமது கடமை என்றும் திமுக நிர்வாகிகளுக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகத்தைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட வருமாறு நூலக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை ஆணையத் தலைவரின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப் பெறப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.