கராச்சி: நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொழுகையின் போது ஒரு மசூதியில் (Mosque) ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் ஒரு இமாம் மற்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 16 பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி - DSP) அமானுல்லாவும் (Amanullah) அடங்கும் என்று குவெட்டா (Quetta) துணை ஆய்வாளர் (டிஐஜி) அப்துல் ரசாக் சீமா தெரிவித்தார்.
மேலும் சில ஊடக அறிக்கையின்படி, காவல்துறை அதிகாரியை குறிவைத்து தான் இந்த தாக்குதல் இலக்கு நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த மாதம், இதே குவெட்டாவில் டிஎஸ்பியின் மகனை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#UPDATE Balochistan: Ten persons, including a police officer, killed in a blast inside a mosque in Quetta today. #Pakistan https://t.co/0HwEUJLTMP pic.twitter.com/dsoDAwSmK0
— ANI (@ANI) January 10, 2020
குண்டுவெடிப்பு நடந்த சம்பவத்தை அறிந்ததும், உடனடியாக அங்கு சென்ற சட்ட அமலாக்க அமைப்புகள் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளன. இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
பெரும்பான்மையான மக்கள் தொகை கொண்ட பஷ்டூன் பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியில் குண்டு வெடித்ததில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். காயம் அடைத்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றார்.
பிரதமர் இம்ரான் கான் இந்த தாக்குதலைக் கண்டித்து, உயிர் இழப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல பலூசிஸ்தான் முதல்வர் ஜாம் கமல் கானும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம், பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பில் ஒரு பிரார்த்தனைத் தலைவர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர். அதேபோல ஆகஸ்ட் மாதம், ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஒரு மசூதிக்குள் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.