Corona Alert: ஜப்பானைத் தொடர்ந்து கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வட கொரியா

Corona Restrictions In North Korea: சீனாவிலும், தென் கொரியாவிலும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்! எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டது வடகொரியா

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2023, 11:23 AM IST
  • கொரோனாவால் சிக்கலில் சிக்கித் தவிக்கும் வட கொரியா
  • சீனாவிலும், தென் கொரியாவிலும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!
  • எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டது வடகொரியா
Corona Alert: ஜப்பானைத் தொடர்ந்து கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வட கொரியா title=

Corona Virus Updates: அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வட கொரியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து நோய்த்தொற்றுகள் பரவினால், ஏற்கனவே இருக்கும் பொருளாதார சிக்கல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் வடகொரிய அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 குளிர்காலம் தொடங்கிய நிலையில், தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய வடகொரிய அரசின் தேசிய தொலைக்காட்சி, ஓமிக்ரான் வகை கொரோன் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க | மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு கெட்டதா... சர்ச்சையை விட சத்து ஜாஸ்தி!

தொற்றுநோய்களை "முழுமையாக" தடுக்கும் முயற்சியில், கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மக்களை வடகொரிய அரசு வலியுறுத்தி இருப்பதாக  கொரியன் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், நாடு கோவிட்-19 நெருக்கடியை வெற்றி கொண்டதாக அறிவித்த வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், மே 2022 இல் நாட்டில் முதல் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும், மூன்று மாதங்களுக்குப் பிறகு தொற்றுநோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மக்கள் முகக் கவசங்களை அணியத் தொடங்க வேண்டும் என்று நவம்பர் மாதத்தில் கேட்டுக் கொண்ட கிம், இல்லையென்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் என்று கூறினார். அதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பரில், அவர் கோவிட்  நோய்த்தடுப்பு பிரச்சாரத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க | COVID-19: இனி ‘இந்த’ மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்! புதிய விதிமுறைகள் அமல்!

வட கொரியா ஜனவரி 2020 முதல் அனைத்து எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளையும் தடை செய்துள்ளது, வர்த்தகம், பயணம் மற்றும் சுற்றுலா உட்பட, நாட்டின் முக்கிய வெளிநாட்டு பண ஆதாரங்கள் அனைத்தும் அதனால் முடங்கி போயுள்ளன.

நாட்டின் எல்லை மூடப்பட்டதன் விளைவாக வட கொரியப் பொருளாதாரம் மோசமடைந்தது என்பதோடு, 2022 இல் முதன்முதலாக, தனது நாட்டின் சவால்களை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். 2020–21ல், கொரியாவின் புள்ளிவிவரங்களின்படி, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.5–4.6% குறைந்துள்ளது.

தொற்றுநோய் காரணமாக எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்கு மூன்று வருட கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அதன் தன்னிறைவு பொருளாதார அமைப்பை சீரழித்துவிட்டது. 2023 ஆம் ஆண்டில், சீனா மற்றும் ரஷ்யாவுடனான தனது எல்லைகளை வட கொரியா படிப்படியாக திறக்கும் சாத்தியம் இருப்பதாக தி டிப்ளமோட் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | Coronavirus: சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News