சிக்கிம் எல்லை விவகாரம்: 1962-ல் இருந்த சீனா தற்போது மாறியிருக்கிறது!!

Last Updated : Jul 3, 2017, 06:47 PM IST
சிக்கிம் எல்லை விவகாரம்: 1962-ல் இருந்த சீனா தற்போது மாறியிருக்கிறது!! title=

சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு படைகளும் சிக்கிம் எல்லை தங்கள் படைகளை குவித்து உள்ளது. இதனால், இந்திய மற்றும் சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

1962-ம் ஆண்டில் நடந்த போரை மேற்கோள்க்காட்டி, “இந்தியா வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனா கூறியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது, 1962-ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017-ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனக் கூறினார். 

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பேச்சுக்கு, சீனா பதில் அளித்துள்ளது. சீனாவின் நிலையும் தற்போது மாறியிருக்கிறது. தங்கள் இறையாண்மையை காக்க சீனா தேவையான நடவடிக்கைக எடுக்கும் என சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News