7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட் வந்துள்ளது. 2024 புத்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டுவந்துள்ளது. ஊழியர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி மற்றொரு அலவன்சிலும் ஏற்றம் இருக்கும். இவற்றின் காரணமாக ஒட்டுமொத்த ஊதியத்தில் நல்ல உயர்வு காணப்படும். இந்த ஏற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
31 ஜனவரி 2024 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அசல் தரவு பற்றிய தெளிவு கிடைக்கும். ஏனெனில், இந்த தேதியில் டிசம்பர் மாதத்தின் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் வெளிவரும். இதன் பிறகு ஜனவரி முதலான அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது தெளிவாகும். நவம்பர் வரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்பை குறைந்தபட்சம் 50 சதவிகிதத்தை எட்டும் என்பது தெளிவாகிறது. டிசம்பர் தரவு வந்தவுடன் முழுமையான உயர்வு பற்றி தெரியவரும்.
ஏஐசிபிஐ குறியீட்டு
ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு மறுஆய்வு செய்யப்படுகின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) 46 சதவிகித அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இது ஜனவரி முதல் 50 அல்லது 51% வரை அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது.
அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு மார்ச் 2024 இல் வரும். அதே சமயம் ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியும் உள்ளது. ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு அலவன்சில் 3% அலவன்ஸ் உயர்த்தப்படும். 2021க்குப் பிறகு இதுவே மிகப்பெரிய உயர்வாக இருக்கும்.
வீட்டு வாடகை கொடுப்பனவில் 3% ஏற்றம்
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) விரைவில் 50% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படியுடன் மத்திய ஊழியர்களின் மற்றொரு கொடுப்பனவும் அதிகரிக்கும். ஆம், வீட்டு வாடகை கொடுப்பனவும் (House Rent Allowance) அதிகரிக்கும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் (7th Pay Commission) மத்திய அரசு அதை அதிகரிப்பதற்கான விதிகளை அமைத்துள்ளது.
2021 இல் அகவிலைப்படி (Dearness Allowance) 25% ஐத் தாண்டியபோது HRA திருத்தப்பட்டது. ஜூலை 2021 இல் 25% DA ஐ தாண்டியதால் HRA 3% அதிகரித்தது. HRA தற்போது 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளது. அகவிலைப்படி விரைவில் 50% அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், HRA மீண்டும் 3 சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் படிக்க | சேமிப்புக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய வரம்பு என்ன? மீறினால் வருமான வரி நோட்டீஸ்
நகரத்திற்கு ஏற்ப HRA பலன் கிடைக்கும்
மத்திய ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) திருத்தப்பட்ட அகவிலைப்படியை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து ஊழியர்களும் அதிகரித்த HRA நன்மையைப் பெறுவார்கள். நகரத்தின் அடிப்படையில் HRA 27%, 18% மற்றும் 9% ஆக உள்ளது. 2015ம் ஆண்டு இதற்கான குறிப்பாணையை அரசு வெளியிட்டது. இதன்படி எச்ஆர்ஏ அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டது. இதற்காக அகவிலைப்படியின் 3 நிலைகள் நிர்ணயிக்கப்பட்டன - 0, 25, 50 சதவீதம்.
HRA Hike: குறைந்தது 30% ஆக இருக்கும்
வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும். HRA -வின் அதிகபட்ச விகிதம் 27% ஆகும். திருத்தத்திற்குப் பிறகு, HRA -வின் அதிகபட்ச விகிதம் 30 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால் 50% அகவிலைப்படி கிடைக்கும் போதுதான் இது நடக்கும். குறிப்பாணையின் படி, அகவிலைப்படி 50% ஆகும் போது, HRA 30%, 20% மற்றும் 10% ஆக மாறும். X, Y மற்றும் Z வகுப்புகள் நகர வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) பிரிவில் உள்ளன. தற்போது X பிரிவு மத்திய பணியாளர்களுக்கு 27% HRA கிடைக்கிறது. அகவிலைப்படி 50% ஆனவுடன் இது 30% ஆகிவிடும். அதேசமயம் Y பிரிவினருக்கு இது 18%லிருந்து 20% ஆக அதிகரிக்கும். Z வகுப்பிற்கு 9% -லிருந்து 10% ஆக அதிகரிக்கும்.
HRA கணக்கீடு என்றால் என்ன?
7வது சம்பள மேட்ரிக்ஸின் படி, வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்கள் HRA இன் பலனைப் பெறுகிறார்கள். HRA அளவு நகரத்திற்கு நகரம் வேறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, டயர்-2 அல்லது டயர்-3 நகரங்களில் வசிக்கும் பணியாளரை விட டயர்-1 நகரங்களில் வசிக்கும் பணியாளர்கள் அதிக HRA பெறுவார்கள்.
மேலும் படிக்க | செல்வமகள் சேமிப்பு திட்டம்... ‘இதை’ தவற விடாதீங்க... கணக்கு முடங்கும் அபாயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ