தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக வெளியான எக்ஸிட் போல் முடிவுகளால் உற்சாகமான பங்குச் சந்தை 2500 புள்ளிகள் உயர்ந்தது. இதனால், ஒரே நாளில் அதாவது திங்களன்று அதானி குழுமத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்து, 11 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதால், கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. ஆனால், ஒரே நாளில் 2079412695000 ரூபாய் அளவிலான சொத்தை இழந்தார் என்பது அதிர்ச்சியாக இருக்கும்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் முடிவுகள்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி ஆச்சரியத்தை சிலருக்கும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்திய மகளின் தீர்ப்பு எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை கொடுக்கவில்லை. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நேற்று (ஜூன் 4 செவ்வாய்க்கிழமை), தேர்தலின் முடிவின் எதிரொலி பங்குச்சந்தை வர்த்தகத்தில் பலமாக எதிரொலித்தது.
ரூ.30 லட்சம் கோடி இழப்பு
நான்கு ஆண்டுகளில் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இது. ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். நேற்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை மற்றும் வங்கிகளின் பங்குகளில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டது. அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்தன. அதானி மட்டுமல்ல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் 3000 ரூபாய் சரிந்தன. அவர்களின் சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுத்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம் தான்.
ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் லாபம்
ஒரே நாளில் முகேஷ் அம்பானிக்கு 8.99 பில்லியன் டாலர்கள் (75079 கோடிகள்) இழப்பு என்றால், அதானிக்கு 24.9 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 207941 கோடிகள்) இழப்பு ஏற்பட்டது. எக்ஸிட் போல் முடிவுகளால் திங்களன்று அதானி குழுமம் 11 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியது. சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக கௌதம் அதானியின் அந்தஸ்தும் உயர்ந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு உயர்ந்தார்.
மக்களவை தேர்தல் முடிவுகளும் அதானியின் சொத்து வீழ்ச்சியும்
செவ்வாய்கிழமை சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியின் தாக்கம் அதானியின் செல்வத்தில் மட்டுமல்லாது அவரது அந்தஸ்திலும் காணப்பட்டது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் பில்லியனர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு கௌதம் அதானி இறங்கிவிட்டார். தற்போது அவரது சொத்து மதிப்பு 97.5 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.
அதானியின் சொத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் பலன், முகேஷ் அம்பானிக்கு கிடைத்து. அதானியை பின்னுக்குத் தள்ளி கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு முன்னேறினார் முகேஷ் அம்பானி என்றபோதிலும், அவரது சொத்தின் மதிப்பும் குறைந்துள்ளது.
அதானி குழும பங்குகளில் சரிவு
அதானியின் சொத்தும், அந்தஸ்தும் சரிவடைந்ததற்குக் காரணம், அவருடைய நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்ததுதான். செவ்வாயன்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் 20 சதவீதம் சரிந்தது, அதானி பவர் 17.55 சதவீதம் சரிந்தது.
அம்பானியின் பங்குகளில் வீழ்ச்சி
மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மதிப்பு 19.07 சதவீதமும், அதானி போர்ட் 21.40 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 18.53 சதவீதமும் சரிந்தன. அதானி வில்மரின் பங்குகள் குறைந்தபட்சம் 10 சதவீதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எனர்ஜி சொல்யூஷன், ஏசிசி, என்டிடிவி மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகியவையும் இந்த வீழ்ச்சியால் 24.9 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
அம்பானியின் அந்தஸ்து அதிகரித்ததால், அதானியின் செல்வாக்கு குறைந்தது
பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் அம்பானியின் சொத்து மதிப்பு சரிந்தாலும், அவரது பணக்காரர் அந்தஸ்து அதிகரித்துள்ளது. பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி ஒரு இடம் முன்னேறி 11வது இடத்தை பிடித்துவிட்டார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7.53% சரிவுடன் ரூ.2793.60 இல் நிறைவடைந்தது. மறுபுறம், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் 6.54% சரிந்து ரூ.332.80 ஆக உள்ளது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ