Amazon Online Fraud: ஆர்டர் செய்தது வெள்ளி, வந்தது கோதுமை, நடந்தது என்ன?

அமேசானில் வெள்ளி ஆர்டர் செய்த உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிக்கும் விஸ்வநாத் சர்மாவுக்கு ஆர்டர் செய்த பொருள் டெலிவரி ஆனவுடன் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2021, 02:57 PM IST
  • அமேசானில் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது மற்றொன்று.
  • புகாருக்கு முன்பே அமேசான் ரீஃபண்ட் வந்தது.
  • ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அதிக அளவிலான கவனம் தேவை.
Amazon Online Fraud: ஆர்டர் செய்தது வெள்ளி, வந்தது கோதுமை, நடந்தது என்ன? title=

புதுடெல்லி: இப்போதெல்லாம் மக்கள் ஆன்லைனில் அதிகமாக பொருட்களை ஆர்டர் செய்து வருகிறார்கள். தொற்றுநோய் காலத்தில் வெளியில் சென்று பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வீட்டிற்கே வரவழைப்பது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள். மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ நாம் ஆர்டர் செய்த பொருள் நம்மிடம் வந்து விடுகுறது. நீங்கள் எங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சில நேரங்களில் இந்த வசதிக்கு பதிலாக நீங்கள் ஒரு பெரிய விலையையும் செலுத்த வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் ஆன்லைன் மோசடி வழக்குகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. யார் வேண்டுமானாலும் இதை இந்த மோசடிக்கு ஆளாகலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தது வெள்ளி, வந்தது கோதுமை!

ஆன்லைன் மோசடி (Online Fraud) வழக்கு உங்கள் நம்பிக்கையின் அடித்தளத்தை உலுக்கி விடும் அளவுக்கு மோசமானதாகவும் இருக்கக்கூடும். உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் பிரதாப்கரில் வசிக்கும் விஸ்வநாத் சர்மாவும் அப்படித்தான் உலுக்கப்பட்டார். அவர் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் இருந்து அரை கிலோகிராம் வெள்ளி ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவர் செய்த ஆர்டர் வீடு வந்தவுடன் அவர் ஆடிப்போனார். ஆம்!! அவர் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது மற்றொன்று!!

மலிவான வெள்ளி கிடைத்ததால் ஆர்டர் செய்தார்

விஸ்வநாத் சர்மா அமேசானில் (Amazon) வெள்ளி மலிவாகக் கிடைப்பதைக் கண்டு அரை கிலோ வெள்ளியை ஆர்டர் செய்தார். இதற்காக, அவர் 30 ஆயிரம் ரூபாயும் செலுத்தினார். ஆனால், அந்த நேரத்தில் சந்தையில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 65 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் இருந்தது. அதாவது, ஆன்லைனில் வாங்குவதால் அவருக்கு சுமார் 2,500 ரூபாய் லாபம் கிடைத்தது. ஆகையால் அவர் மிகுந்த ஆர்வத்துடன் வெள்ளியை ஆன்லினில் வாங்க ஆசைப்பட்டார். Amazon மூலம் அவரது ஆர்டர் வந்தபோது, ​​அவர் ஒரு விவேகமான வேலையைச் செய்தார். வந்த பாக்கெட்டை அவர் டெலிவரி செய்த நபருக்கு முன்பாகவே திறந்தார். ஏனெனில் பாக்கெட்டை தொட்டவுடன் அவருக்கு சந்தெகம் ஏற்பட்டது. ஆகையால் அவர் இவ்வாறு செய்தார்.

ALSO READ: Amazon இல் Republic Day Sale தொடங்கம்: பிராண்டட் ஸ்மார்ட்போன்களை 40% தள்ளுபடி!

Amazon-னிடமிருந்து புகார் செய்வதற்கு முன்பு பணத்தைத் திரும்பப் பெற்றார்

அவர் டெலிவரி நபரை நிறுத்தி, அவருக்கு முன்னால் பாக்கெட்டைத் திறக்கத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஏனென்றால் அதில் வெள்ளிக்கு பதிலாக கோதுமை நிரப்பப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த பாக்கெட்டின் படங்களை எடுத்தார். அவர் உடனடியாக அமேசானிடம் புகார் செய்தார். ஆனால், விஸ்வநாத் சர்மா புகார் அளிப்பதற்கு முன்னரே அமேசான் அவருக்கு பணத்தைத் திரும்பத் தந்ததாகக் கூறினார். இது இந்த மோசடியைப் பற்றி அமேசான் எவ்வாறு முன்பே அறிந்து கொண்டது என்ற கேள்வியை எழுப்புகிறது. வாடிக்கையாளர் விஸ்வநாத் சர்மா டெலிவரி பாயிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தோடு தொலைபேசியிலும் அமேசானிடம் புகார் அளித்துள்ளார்.

புகாருக்கு முன்பே எவ்வாறு ரீஃப்ண்ட் வந்தது?

புகாருக்கு முன்பே ரீஃபண்ட் வந்ததால், இந்த விஷயம் சிக்கலாக உள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் வாடிக்கையாளரின் கணக்கில் ஜனவரி 14 அன்றே ரூ .22,660 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான புகார் அதன் பின்னர்தான் அளிக்கப்பட்டது. இரண்டாவது விஷயம் என்னவென்றால், அமேசானில் இருந்து 22,660 ரூபாய் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மீதமுள்ள 7340 ரூபாய் ஏன் கழிக்கப்பட்டது? அமேசானுடன் பதிவு செய்துகொண்ட இந்த வெள்ளி விற்பனையாளர் ஏதேனும் மோசடி செய்ய முயற்சித்துள்ளாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

மொத்தத்தில், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது (Online Shopping) அதிக அளவிலான கவனமும் புத்திசாலித்தனமும் தேவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ALSO READ: Great Republic Day Sale! அதிக தள்ளுபடியுடன் ஜனவரி 20 முதல் Amazon இல் தொடங்கம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News