ujjwala yojana: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் கேஸ் சிலிண்டர்களின் விலையேற்றம் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் ஆகியவை வர இருப்பதால் இந்த பட்ஜெட்டில் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இருக்கும் பெண்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை அதிகரிப்பார் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இலவச கேஸ் சிலிண்டர் திட்டமும் தொடரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு சுமார் 5812 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தவிர, இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப் மூலம் எல்ஐசி-யின் இந்த சேவைகளை பெறலாம்!
எரிவாயு சிலிண்டருக்கு மானியம்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிடைக்கும் 12 காஸ் சிலிண்டர்களுக்கும் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. மானியத்தில் ஒவ்வொரு எல்பிஜி சிலிண்டருக்கும் 200 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த மானியம் எதிர்வரும் பட்ஜெட்டிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான். லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, 100% மக்களைச் சென்றடைய அரசாங்கம் இந்தத் திட்டத்தை தொடர விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 கோடி பயனாளிகள்
கடந்த சில வருடங்களில் கேஸ் சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 மே மாதம் 200 ரூபாய் மானியத்தை அறிவித்தார். இது ஏழைகளுக்கு சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த திட்டம் ஒரு நிதியாண்டில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். இத்திட்டத்தின் மூலம் 9 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் அரசு ரூ.5812 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
உஜ்வாலா திட்டம் என்றால் என்ன?
இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு எல்பிஜி எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அவர்களுக்கு ரூ.1,600 நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, இலவச ரீஃபில் மற்றும் அடுப்பு வழங்கவும் வழிமுறை உள்ளது. அரசாங்கம் 2016-ல் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவைத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டு உஜ்வாலா 2.0-ஐக் கொண்டு வந்தது.
மேலும் படிக்க | Budget 2023: பெட்ரோல், தங்கம் விலைகள் அதிகரிக்குமா! அதிர்ச்சி தருவாரா நிதியமைச்சர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ