Income Tax: வரி செலுத்துவோர் அனைவரும் வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அனைவரும் அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால், அதற்கு முன் வரி செலுத்துவோர் வரி அமைப்பு குறித்த சில முக்கியமான தகவல்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்து விதமான வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டியதில்லை என்பது பலருக்கு தெரிவதில்லை. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வரி செலுத்தக்கூடிய வருமானம்
நாம் பெறும் அனைத்து விதமான வருமானத்திற்கும் வரி செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் சில ஆதாரங்களில் இருந்து வரும் வருமானத்தை வருமான வரியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது. இந்த நாட்களில் மக்கள் பல வகைகளில் பணத்தை ஈட்டுகிறார்கள். இந்த சூழலில் எந்த வகையான வருமானத்திற்கு வரி செலுத்த வெண்டும், எதற்கு செலுத்த வேண்டாம் என்பது பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
Non-Taxable Income என்பது வரி வசூலிக்கப்படாத வருமானம் ஆகும். அதாவது இந்த வருமானத்திற்கு நாம் வரி செலுத்த வேண்டியதில்லை. ஒருவர் தன்னுடைய வரிப் பொறுப்பைக் கணக்கிடும்போது சில ஆதாரங்களில் இருந்து வருமானத்தை விலக்கி விடலாம். இந்தியாவில் வரி வசூலிக்கப்படாத வருமானத்திற்கு பல மூலங்கள் உண்டு. இந்த வழிகள் மூலம் பணம் ஈட்டும்போது அவற்றுக்கு வரி செலுத்த வேண்டாம் என்பதால், இது நமது நிதியை சிறப்பாக நிர்வகிக்கவும், வரிச்சுமையை குறைக்கவும் உதவும்.
எப்படிப்பட்ட வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது?
சொத்துகள் (Property)
- ஒருவர் தனது பெற்றோரிடமிருந்து சொத்து, நகை அல்லது பணம் ஆகியவற்றை பெற்றால், அதற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
- உங்கள் பெயரில் உயில் இருந்தால், அதன் மூலம் பெறப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டாம்.
- எனினும், ஒருவருக்குச் சொந்தமான சொத்திலிருந்து சம்பாதிக்கும் வருமானத்திற்கு அவர் வரி செலுத்த வேண்டும்.
பணிக்கொடை (Gratuity)
- பணிக்கொடை, அதாவது கிராஜுவிட்டிக்கு வருமான வரி விதிக்கப்படாது.
- இது ஊழியர்களுக்கு ஓய்வு பெறும்போது அல்லது ஊழியர்கள் இறந்தால் வழங்கப்படும் தொகை.
- பணிக்கொடைக்கு அரசு ஊழியர்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு கிடைக்கிறது.
- தனியார் துறை ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரையிலான பணிக்கொடைக்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்
ஆயுள் காப்பீட்டு பாலிசி (Life Insurance Policy)
- உங்களிடம் ஆயுள் காப்பீட்டு பாலிசி இருந்தால், அந்த பாலிசி முதிர்ச்சியடையும் போது நீங்கள் பெறும் பணத்திற்கு வரி செலுத்த வேண்டாம்.
- எனினும், வருடாந்திர பிரீமியம் (பாலிசிக்காக நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தும் தொகை) காப்பீட்டுத் தொகையில் (பாலிசியின் விலை) 10% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- அப்படி அது அதிகமாக இருந்தால், அதிகப்படியான தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
தங்க வைப்புப் பத்திரங்கள் (Gold Deposit Bonds)
- வருமான வரிச் சட்டத்தின் 10(15) பிரிவின்படி, சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், லோக்கல் அதாரிடி மற்றும் உள்கட்டமைப்புப் பத்திரங்கள் மற்றும் தங்க வைப்புப் பத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரி விதிக்கப்படாது.
பரிசுகள் (Gifts)
- வருமான வரிச் சட்டத்தின்படி (Income Tax Act), இரத்த சம்பந்தம் கொண்ட உறவினர்களிடமிருந்து சொத்து, நகை அல்லது பணம் போன்ற பரிசுகளை பெற்றால் அதற்கு வரி விதிக்கப்படாது.
- உறவினர்கள் அல்லாத நபர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்கு ரூ.50,000 வரை வரி இல்லை.
- இந்து பிரிக்கப்படாத குடும்பத்திலிருந்து (HUF) பெறப்படும் சொத்து அல்லது பரிசுகளும் வரிவிலக்கு உண்டு.
விவசாயம் (Agriculture)
- விவசாயம் அல்லது விவசாய நிலத்தில் விவசாயம் தொடர்புடைய பணிகளின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரிவிலக்கு உள்ளது.
- விவசாய நிலங்களை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானமும் இந்த வரி விலக்கில் அடங்கும்.
மேலும் படிக்க | ITR Filing: இந்த தவறுகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.... ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ