Gold Bonds Meaning And Benefits In Tamil : தங்கப் பத்திரங்கள், சேமிப்புகளை முதலீடு செய்வதற்கு சிறந்த ஐடியாவாக கருதப்படுவது, தங்க பத்திரங்கள்தான். தனித்துவமான இந்த முதலீட்டால் பலர் லாபம் பார்க்கின்றனர். இந்த பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இது, ஒரு தனி நபருக்கு தங்கத்தை கையில் வைத்துக்கொள்ளாமல் சொத்தாக வைத்துக்கொள்வதற்கு உதவும்.
தங்க பத்திரங்கள்:
2015ஆம் ஆண்டு, தங்கப்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை, தங்கத்திற்கு பதிலாக, முதலீடு செய்யப்படுபவை ஆகும். இதில் முதலீடு செய்வதால், முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் வரும் வட்டியினை பெற்றுக்கொள்ளலாம். இதில் முதலீடு செய்பவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்தி அந்த பத்திரத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். இந்த பாண்டை, இந்திய ரிசர்வ் வங்கி வழங்குகிறது.
அரசின் ஆதரவு..
ரிசர்வ் வங்கி, அரசாங்கத்தின் சார்பில் பயன்பாட்டாளர்களுக்கு தங்க பத்திரங்களை வழங்குகிறது. இதன் மீது பலருக்கு நம்பக தன்மையும் உள்ளது. SGB என்பது கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசாங்கப் பத்திரங்களாகும். அவை உண்மையான தங்கத்தை வைத்திருப்பதற்கு மாற்றாக உள்ளன.
யார் யார் வாங்கலாம்?
ஃபாரின் எக்ஸ்ஜேஞ்ச் மேனேஜ்மண்ட் சட்டத்தின் படி, இந்தியர்கள் அனைவரும் தங்கப்பத்திரம் வாங்குவதற்கு தகுதியுடைவர்களாகின்றனர்.
மேலும் படிக்க | தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கலாமா? புதிய விதிகள் கூறுவது என்ன?
எப்படி வாங்க வேண்டும்?
தங்க பத்திரத்தை ஆன்லைனில் டிமேட் கணக்கு மூலமாக வாங்கலாம். இதை நேரிலும் சென்று வாங்கலாம். ஆன்லைனில் வாங்கினால், ரூ.50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். இதை, அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும்.
இதில் முதலீடு செய்வதால் என்ன பயன்?
வட்டி செலுத்துதல்: முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரம் 2.5% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி, அரையாண்டுக்கு வழங்கப்படுகிறது. மேலும், இதில் ஜி.எஸ்.டி கட்டணம் இல்லை.
சேமிப்பு செலவுகள் உண்டா:
டீமேட் முறையில் கோல்ட் பத்திரம் வைத்திருப்பவர்கள், வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்களைத் தவிர, சேமிப்புச் செலவுகள் எதுவும் செய்ய தேவையில்லை.
கலப்பட பயம் இல்லை:
தங்கத்தை வாங்கும் போது அதில் கலப்படம் இருக்கிறதா, செய்கூலி சேதாரம் உள்ளதா என பார்க்க வேண்டும். ஆனால், தங்க பத்திரத்தில் அந்த பயம் எதுவும் தேவையில்லை. இதற்கான கேரண்டியை ரிசர்வ் வங்கியே அளிக்கிறது.
மேலும் படிக்க | வருமான வரியை சேமிக்கணுமா? பலருக்கு தெரியாத 4 வழிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ