Health Benefits Of Avocado Juice: அவகாடோ மிகுந்த ஊட்டச்சத்து வாயந்த ஒன்றாகும். இதனை அதன் உள்ளே இருக்கும் கொட்டை நீக்கி, நடுவே உள்ள பழத்தை மட்டும் சுரண்டி எடுத்து உட்கொள்ளலாம். இதனை பழமாகவும் சாப்பிடலாம், சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம். இல்லையெனில் பழத்தை ஜூஸ் போட்டும் அருந்தலாம். அவகாடோவில் வைட்டமிண் C, E, K மற்றும் B-6 உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.
அதுதான் அவகாடோ ஜூஸ் சத்து மிகுந்தது மட்டுமின்றி சுவை நிறைந்தது ஆகும். அவகாடோ ஜூஸ் இதய ஆரோக்கியத்தில் இருந்து சரும பாதுகாப்பு வரை ஊட்டம் அளிக்கக் கூடியதாகும். உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் அவகாடோ ஜூஸை குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அவகாடோவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் அதிலும் குறிப்பாக நிறைவுறாத கொழுப்புகள் உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
மேலும் அவகாடோவில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவிப்புரியும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவும். இந்த அவகாடோ ஜூஸில் Lutein மற்றும் Zeaxanthin உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இவை கண் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பவை. அவகாடோவில் இருக்கும் பொட்டாஸியம் ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவும். அந்த வகையில், இத்தகைய ஊட்டச்சத்துகள் நிறைந்த அவகாடோ ஜூஸை வாரம் ஒருமுறை குடித்தால் கிடைக்கும் 5 கூடுதல் நன்மைகளை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீங்க... ஆசிடிட்டி பிரச்சனை ஏற்படும்
கர்ப்பிணிகள் கவனத்திற்கு
அவகாடோ ஜூஸை கர்ப்பிணிகள் கூட சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைகள் எவ்வித குறைப்பாட்டுடனோ, உடல் பிரச்னையுடனோ பிறக்காமல் இருக்க கர்ப்பிணிகள் இந்த அவகாடோ ஜூஸை அருந்தலாம். இதில் உள்ள ஃபோலேட் மூளையிலும், முதுகுதண்டிலும் எவ்வித பிரச்னையும் இன்றி குழந்தைகள் பிறக்க உதவும்.
மூளை ஆரோக்கியம்
அவகாடோவில் உள்ள Lutein என்ற ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இயற்கையாகவே மூளை ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும். வயது வந்தவர்களுக்கு இது அதிம் உதவுக்கூடியதாகும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
Oleic அமிலம் உள்ளிட்ட ஆரோக்கியமான கொழுப்புகள் அவகாடோவில் நிறைந்திருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கங்களை இது குறைத்து, இதயத்தை பாதுகாக்கும். இதில் உள்ல Beta-sitosterol என்ற கொலஸ்ட்ரால், உடலின் மொத்த கொலஸ்ட்ராலை அளவை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.
ரத்த அழுத்தம்
அவகாடோவில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் பொட்டாஸியம் உடலின் சோடியம் அளவை குறைக்க உதவும். அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் மேற்பரப்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும்.
செரிமானத்திற்கு பயனளிக்கும்
அவகாடோவில் இடம்பெற்றுள்ள நார்ச்சத்து இயல்பான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மலச்சிக்கலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
மேலும் படிக்க | சிவப்பு முட்டைகோஸ் கேள்வி பட்டிருக்கீங்களா? ஒரே இலை பல நன்மை !!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ