Vitamin C supplements Overdose Effects in Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் தாதுக்கள் ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். எனவே தான் உளவியல் நிபுணர்கள் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஏதேனும் ஒரு விட்டமின் அல்லது தாதுக்கள் குறையும் போது, அது ஏதோ ஒரு வகையில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில அறிகுறிகள் மூலம் அதன் குறைபாட்டை கண்டு கொள்ளலாம். சில சமயங்களில் கடுமையான நோய்களும் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் விட்டமின் சி யும் உடலுக்கு மிகவும் மிக தேவையான ஒரு ஊட்டச்சத்து.
வைட்டமின் சி
வைட்டமின் சி, எலும்பு ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து. இந்த சத்து உடலில் குறைந்தால் ஏற்படும் பாதிப்பை போலவே, ஓவர் டோஸும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை விட, வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இந்நிலையில், வைட்டமின் சி அதிகமானால் ஏற்படும் பாதிப்புகளை (Health Tips) பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிறுநீரக கல் பிரச்சனை
அளவிற்கு அதிகமாக வைட்டமின்-சி உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக கல் ஏற்படலாம். ஏனெனில் உடலில் சேரும் கூடுதல் வைட்டமின்-சியை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. ஆனால், சில சமயங்களில் மற்ற தாதுக்களுடன் கலந்து சிறு படிகங்களாக மாறி சிறுநீரகக் கல்லாக மாறலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி
வைட்டமின் சி சத்து மாத்திரைகள் அளவிற்கு அதிகமானால், செரிமானத்திற்கு தேவையான நொடிகள் அளவில் சமச்சீரற்ற நிலை ஏற்பட்டு இதனால் வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி அதிகரிக்கலாம்.
நெஞ்செரிச்சல்
வைட்டமின் சி சத்து சப்ளிமெண்ட்ஸ் மாத்திரைகள் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது, உடலில் அமில சுரப்பு அதிகரித்து, நெஞ்செரிச்சல் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சில சமயங்களில் வயிற்றை சுவர்கள் கூட பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். எனவே நீண்ட காலமாக, செரிமான பிரச்சனைகள் இருந்தால், வைட்டமின் சி மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
அளவிற்கு மிஞ்சிய வைட்டமின் சி சத்து, செரிமான செயல்பாடு பாதிக்கப்பட்டு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். வைட்டமின் சி சத்து இரும்பு சத்து உடல் கிரகித்துக்குள்ள உதவுகிறது. வைட்டமின் சிசத்தை உடல் உற்பத்தி செய்வது அல்லது சேமித்து வைப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது அதிகமானால் வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி பிரச்சனைகள் ஏற்படும்.
ஒரு நாளைக்கு எந்த அளவிற்கு விட்டமின் சி நம் உடலுக்கு தேவை
நம் உடலின் வைட்டமின் சி தேவை குறித்து, உணவில் நிபுணர்கள் குறிப்பிடுகையில், பெண்களுக்கு தினசரி 75 மில்லி கிராம் தேவை என்றும், ஆண்களுக்கு தினசரி 90 மில்லி கிராம் தேவை என்றும் கூறுகின்றனர். எனினும், பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தில், நாள் ஒன்றுக்கு 120 மில்லி கிராம் வைட்டமின் சி எடுத்துக் கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த அளவிற்கு மிகாமல் எடுத்துக் கொள்வதால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இந்த அளவை மீறும் போது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ