Early Symptoms of Thyroid: இன்றைய காலகட்டத்தில் தைராய்டு பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. நமது மோசமான, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படிகின்றது. சமீப காலங்களில் இந்த காரணத்தால், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய பிரச்சனைகளும் அதிகமாகி வருகின்றன. இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை போல தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எப்படி கண்டுபிடிப்பது? தைராய்டுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன? இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
தைராய்டின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே இதை கட்டுப்படுத்தலாம். இல்லையெனில், இதை கட்டுப்படுத்துவது மிக கடினமாகிவிடும். இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் பொதுவான அறிகுறிகளாக இருப்பதால், இவற்றை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. ஆகையால், தைராய்டுக்கான ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி சரியாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது தொண்டையின் கீழ் பகுதியில் இருக்கும் ஒரு சுரப்பி. இது ட்ரையோடோதைரோனைன் மற்றும் தைராக்ஸின் எனப்படும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு சுரப்பி இந்த இரண்டு ஹார்மோன்களை தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெளியிட்டால், அப்போது உடலில் தைரய்டு பிரச்சனை ஏற்படுகின்றது.
தைராய்டின் ஆரம்ப அறிகுறிகள்
சோர்வு
அதிக வேலை செய்யும்போது உடலில் சோர்வு ஏற்படுவது இயல்பான ஒரு விஷ்யம்தான். ஆனால், காரணமே இல்லாமல் உடலில் சோர்வான உணர்வு இருந்தால், அது தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு பிரச்சனையில் ஹார்மோன்களின் குறைபாடு ஏற்படுவதால், உடலில் ஆற்றல் குறைகிறது. இதனால் சோர்வு, அடிக்கடி தூங்க வேண்டும் போன்ற உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன.
எடையில் மாற்றம்
தைய்ராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு எடை அதிகரிக்கும், இல்லையெனில் எடை குறையும். தைராய்டு பிரச்சனை இருந்தல, உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால், உணவு செரிக்கப்படாமல், கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இதனால் அவ்வப்போது எடை இழப்பு, அல்லது எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
மேலும் படிக்க | உடல் எடை குறைய, தொப்பை கொழுப்பு கரைய.. இந்த உணவுகள் பக்கமே போகாதீங்க
கூந்தல் உதிர்தல்
முடி அதிமமாக உதிர்வதும் தைராய்டின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. கூந்தல் தொடர்ச்சியாக வேகமாக உதிர்கிறதென்றால், அதை ஒரு பெரிய அறிகுறியாக எடுத்துக்கொண்டு தைராய்டு பரிசோதனை செய்துகொளவது நல்லது.
செரிமானத்தில் பிரச்சனை
அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏனெனில் இவையும் தைராயடு பிரச்சனையில் சில அறிகுறிகளாக உள்ளன.
குளிர்ச்சி அல்லது சூடான உணர்வு
தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவ்வப்போது குளிரும் உணர்வு ஏற்படுகின்றது. உடல் பாகங்கள் குளிர்ச்சியாக இருக்கின்றன. சில நோயாளிகள் சூடாகவும் உணர்கிறார்கள். இதற்கு தைய்ராய்டு காரணமாக இருக்கலாம் என்பதால், இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ