முக சுருக்கங்களுக்கான சிகிச்சை: கடுமையான வெயில், கடும் குளிர், ஈரப்பதமான சூழல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான உணவு முறையால் நம் சருமத்தில் நேரடி விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு வயதிற்குப் பிறகு முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது சாதாரணமானது. ஆனால், வயதுக்கு முன்னரே தோல் தொய்வடைய ஆரம்பித்து, முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது கவலையை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து அதிகரித்து வரும் மன அழுத்தத்தின் விளைவு முகத்தின் தோலையும் பாதிக்கிறது. இந்த சுருக்கங்களை சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால், அவற்றை அகற்றுவது இன்னும் கடினமாக இருக்கும். எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், இந்த சுருக்கங்களை எளிதாக போக்கலாம். இவற்றின் மூலம் உங்கள் வயது பல ஆண்டுகள் குறைவாகத் தோன்றும்.
வறட்சியிலிருந்து முகத்தை பாதுகாக்கும்
உங்கள் முகத்தை சுருக்கங்களிலிருந்து பாதுகாக்க, உங்கள் முகத்தை வறட்சியிலிருந்து விலக்கி வைப்பது மிக அவசியம். வறட்சியைத் தவிர்க்க, முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சுத்தமான தண்ணீரில் கழுவி, ஈரப்பதமாக்குவது அவசியம். முகத்தை சுத்தம் செய்ய லேசான க்ளென்சரை மட்டுமே பயன்படுத்தவும். நீங்கள் கடுமையான வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், சன்ஸ்கிரீன் தடவி, முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு வெயிலில் செல்லவும்.
மேலும் படிக்க | Kidney Stone: இந்த தினசரி டயட் உங்களுக்கு சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம்
ஆரோக்கியமான உணவு வேண்டும்
நாம் உண்ணும் உணவு முகத்தின் தோலில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. எனவே சுருக்கங்களைத் தவிர்க்க நல்ல உணவை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியம். உங்கள் உணவில் முடிந்தவரை ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். உணவுடன் சாலட் மற்றும் தயிர் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். காலை உணவில் உலர் பழங்களை சாப்பிடுங்கள் மற்றும் நாள் முழுவதும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியமான உணவுமுறை சருமத்தை பளபளப்பாகவும். நீண்ட காலத்திற்கு இளமையாகவும் வைத்திருக்கும்.
நல்ல தூக்கம் அவசியம்
ஒளிரும் மற்றும் சிறந்த சருமத்திற்கு போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானது. இரவில் குறைந்தது 8 மணிநேரம் தூங்குங்கள். ஏனென்றால் ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கம் உடலைப் பழுதுபார்த்து சருமத்தை குணப்படுத்த உதவுகிறது. உடலுக்கு தேவையான அளவு தூக்கம் கிடைத்தால், தோலில் முதுமைக்கு முன்னர் சுருக்கங்கள் ஏற்படாது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்
மன அழுத்தம் உங்கள் சருமத்திற்கும், முழு உடலுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். மன அழுத்தத்தை உங்களிடமிருந்து முடிந்தவரை விலக்கி வைக்கவும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தால், கார்டிசோல் ஹார்மோன் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது கொலாஜனை உடைக்கிறது. கொலாஜன் சருமத்தை பளபளப்பாக வைப்பதில் அதிக பங்காற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | Viral Fever: இதையெல்லாம் உணவில் சேர்த்து பாருங்க, காய்ச்சல் காணாமல் போகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ