சர்வதேச விமானங்களுக்கான (International Flights) கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 25 முதல் 2021 மார்ச் 27 வரை இந்தியா மற்றும் கனடா இடையே கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாக தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா (Air India) அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை விமானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், முன்பதிவு அலுவலகங்கள், அழைப்பு மையங்கள் அல்லது பயண முகவர்களிடம் பதிவு செய்யலாம்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கனடா உட்பட சுமார் 16 நாடுகளுடன் இந்தியா உருவாக்கிய இருதரப்பு விமான குமிழி ஒப்பந்தங்களின் கீழ் ஜூலை முதல் சிறப்பு சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
#FlyAI: Air India will operate additional flights between India & Canada from 25th October '20 to 27th March '21.
Bookings opens today at
1200 hrs (IST) through Air India Website, Booking Offices & Authorized Travel Agents. pic.twitter.com/0wYuTQ1eOw— Air India (@airindiain) October 9, 2020
ALSO READ: Unlock 5.0: இந்த இரண்டு மாநிலங்களில் பள்ளிகளை திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு
யார் பயணிக்க முடியும்? விரிவான SOP களைப் பாருங்கள்
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு
1. கனேடிய பிரஜைகள் / குடியிருப்பாளர்கள் மற்றும் தகுதியான கனடிய விசா கொண்டவர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் கனடாவிற்குள் நுழைய முடியும்;
2. செல்லுபடியாகும் விசாக்கள் கொண்ட இந்தியர்கள் கனடாவுக்குள் நுழைய தகுதியுடையவர்களாவார்கள். இந்திய பயணிகளுக்கு டிக்கெட் / போர்டிங் பாஸ் வழங்குவதற்கு முன், அவர்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் பொறுப்பாகும்.
3. வெளிநாடுகளின் கடற்படை ஊழியர்கள்; இந்திய பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் கடற்படை ஊழியர்கள் கப்பல் அமைச்சகத்தின் அனுமதி இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள்.
கனடாவிலிருந்து இந்தியாவுக்கு
1. கனடாவில் (Canada)தொற்றால் தங்கிவிட்ட இந்தியர்கள்;
2. கனேடிய பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டு குடிமக்கள் (OCI) அட்டைதாரர்கள்
3. அவ்வப்போது திருத்தப்படும், 30.06.2020 தேதியிட்ட உள்துறை அமைச்சக (MHA) வழிகாட்டுதல்களின்படி இந்தியாவுக்குள் நுழைய தகுதியுள்ள வெளிநாட்டினர் (தூதாண்மை அதிகாரிகள் உட்பட) அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள்.
ALSO READ: Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR