டெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உள்ளதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லியின் பல வட்டாரங்களில் வெளிச்சம் குறைவாக காணப்படுகிறது.
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் வீசும் புழுதி புயல் காரணத்தால் டெல்லியின் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Air quality in the national capital remained "hazardous" in many areas today, prompting authorities to alert people to avoid stepping outdoors
Read @ANI Story | https://t.co/cJGGSuNxJQ pic.twitter.com/9HhQgHfa3V
— ANI Digital (@ani_digital) June 15, 2018