நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் விண்ணப்பித்த கருணை மனுவை நிராகரிக்க டெல்லி அரசு பரிந்துரைத்துள்ளது!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஞாயிற்றுக்கிழமை உலகை உலுக்கிய 2012 நிர்பய கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்க பரிந்துரை செய்துள்ளது. லெப்டினன்ட் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், தில்லி அரசு நிரய் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மாவின் கருணை மனுவை நிராகரிக்க "கடுமையாக பரிந்துரைக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் பரிந்துரைகளுடன் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில், ஓடும் பேருந்தில் நிகழ்ந்த இக்கொடூர சம்பவம், உலகையே உலுக்கியது. வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணிற்கு 'நிர்பயா' எனப் பெயரிடப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Delhi Minister Satyendar Jain's noting: This is the case where exemplary punishment should be given to deter others from committing such atrocious crimes. There is no merit in mercy petition, strongly recommended for rejection. 2/2 https://t.co/WVkKxA49iP
— ANI (@ANI) December 1, 2019
இந்நிலையில், தண்டனை குற்றவாளியான வினய் சர்மா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி, கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அவரது கருணை மனுவை டெல்லி மாநில அரசு இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டெல்லி துணை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும் சர்மாவின் கருணை மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி மாநில அமைச்சர் சத்யந்திர ஜெயின் பரிந்துரைத்துள்ளார்.
'நிர்பயா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்க முடியாத குற்றம் செய்துள்ளதால், அவர்களின் கருணை மனுவை ஏற்க முடியாது; அவ்வாறு செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என அமைச்சர் சத்யந்தர ஜெயின் தெரிவித்துள்ளார்.