பொது இடங்களில் ஒருவருக்கு எதிராக அநாகரீகமான அல்லது தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குத் தொடரும் முன், அவர் பகிரங்கமாக தெரிவித்த கருத்துகளை குற்றப்பத்திரிகையில் அடிக்கோடிட்டுக் காட்டுவது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.
துஷ்பிரயோக செயலாகவே கருதப்படும்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஆர்.பட் மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு நபர் மற்றொருவரை 'முட்டாள்' அல்லது 'புத்தியில்லாதவன்' அல்லது 'திருடன்' என்று பகிரங்கமாக அழைத்தால், அது குற்றம் சாட்டப்பட்டவரின் துஷ்பிரயோக செயலாக கருதப்படுகிறது. இது ஒரு பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரைச் சேர்ந்த நபருக்கு எதிராக கூறப்பட்டவையாக இருந்தாலும், அத்தகைய வார்த்தைகளில் சாதி தொடர்பான கருத்துக்கள் கூறப்படாவிட்டால், எஸ்சி எஸ்டி வண்கொடுமை சட்டத்தின் 3(1)(x) பிரிவின் கீழ் குற்றம் சாட்ட முடியாது.
SC/ST சட்டத்தின் 3(1)(x) பிரிவு
சாதிகள்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய வழக்கா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க இது உதவும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஒரு நபரை திட்டிய குற்றங்களுக்காக நபர் மீது SC/ST சட்டத்தின் பிரிவு 3(1)(x) இன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. வன்கொடுமை சட்டத்தின் இந்த பிரிவு எந்தவொரு இடத்திலும் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பட்டியல் சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தை சேர்த நபரை சாதி ரீதியாக வேண்டுமென்றே அவமதிக்கும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதை தடுக்கும் நோக்கில், பட்டியலின மக்களுக்கு இந்த பிரிவு பாதுகாப்பு வழங்குகிறது.
மேலும் படிக்க | திருமணத்திற்கு இரு வேறு பாலினம் கொண்ட துணை அவசியமா: தலைமை நீதிபதி DY சந்திரசூட்
சாதியை குறிப்பிட்டு அவமானப்படுத்தினால் மட்டுமே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்
நீதிபதிகள் எஸ்.ஆர்.பட் மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒரு நபரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொதுவாக செய்யப்படும் அனைத்து அவமானமும் அல்லது மிரட்டலும் SC/ST சட்டத்தின் பிரிவு 3(1)(x) இன் கீழ் குற்றமாகாது. ஒரு குறிப்பிட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவரின் சாதியை குறிப்பிட்டு அவமானபடுத்தினால் அன்றி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்று கூறியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யும் போது, எப்ஐஆர் அல்லது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர வேறு நபர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருப்பதைக் குறிப்பிடவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அந்த சமூகத்தினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபவர்களையும், துன்புறுத்த்துபவர்களையும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
மேலும் படிக்க | விவாகரத்து பெற 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ