நாடு தழுவிய முழு அடைப்புக்கு மத்தியில் பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவும் சேவைகளை மீட்டெடுக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளி புத்தகங்கள் மற்றும் மின்சார விசிறிகளை விற்கும் கடைகள், மூத்த குடிமக்களின் படுக்கை உதவியாளர்களின் சேவைகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள், ப்ரீபெய்ட் மொபைல் போன்களுக்கான ரீசார்ஜ் வசதிகள் உள்ளிட்டவற்றை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
அதேவேளையில் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள ரொட்டி(bread) தொழிற்சாலைகள் மற்றும் மாவு ஆலைகள் போன்றவற்றின் நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
READ | நிதி திரட்டும் முயற்சியில் தனது கிரிக்கெட் பேட்டை ஏலம் விட்டார் KL ராகுல்...
தனித்தனி உத்தரவுகளில், இதுவரை வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சில கேள்விகளைப் பெற்ற பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான கல்வி புத்தகங்களின் கடைகள், மின்சார விசிறிகளின் கடைகள் முழு அடைப்பின் போது திறக்க அனுமதிக்கப்படும், வரும் மே 3-ஆம் தேதி வரை நாட்டில் முழு அடைப்பு நீட்டிக்கப்படும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் நலன் கருதி இந்த சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என தெரிவித்துள்ளது.
படுக்கையறை உதவியாளர்கள் மற்றும் வீடுகளில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் ப்ரீபெய்ட் மொபைல் இணைப்பிற்கான ரீசார்ஜ் செய்வோர் உள்ளிட்ட பொது பயன்பாடுகள் சேவைகளை வழங்குவோர்களுக்கும் முழு அடைப்பின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாவு ஆலைகள், பருப்பு ஆலைகள் போன்ற உணவு பதப்படுத்தும் பிரிவுகள் முழு அடைப்பு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படும். எவ்வாறாயினும், அலுவலகங்கள், பட்டறைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான சமூக தூரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
READ | கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: ஒடிசா அரசு...
பொது பயன்பாட்டு சேவைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் போதிலும், மாநில அரசின் அனுமதிக்கு பின்னரே சேவைகள் தொடர்பானா உத்தரவு செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.