பீகார்: பிரதமர் வேட்பாளர் போட்டியில் நீங்களும் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு "எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை" என்று பீகார் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார். பிரதமராகும் எண்ணமெல்லாம் என் மனதில் இல்லை. அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதே எனது பணி. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதற்கு முயற்சி செய்வேன் என்று கூறினார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் சம்மதித்து ஒன்றுபட்டால் நல்லதுதான். பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவுடனே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக தாக்கிய நிதிஷ்குமார், பிரதமரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் 2014ல் வந்தவர் 2024ல் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதுதான் கேள்வி எனக் கூறினார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்தினால் பொதுமக்கள் சரியான பதில் அவர்களுக்கு அளிப்பார்கள் என பாஜகவை எச்சரிக்கும் வகையில் பேசினார். மேலும் பீகார் அரசின் அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடக்கும் எனக்கூறிய முதல்வர் நிதிஷ்குமார், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு ஏதாவது ஒருநாளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றார்.
பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறிய 10 லட்சம் வேலை வாய்ப்பு வாக்குறுதி குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்களால் முடிந்ததைச் செய்வோம். 2015-2016ல் சொன்னதைச் செய்தோம். அதிகளவில் வேலை வழங்க வேண்டும் என்றும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
#WATCH | When asked about his role in Opposition unity at the national level, Bihar CM Nitish Kumar says, "We would want to unite everyone. I am doing positive work. I am receiving a lot of phone calls, I am doing everything. I will do everything but first I will do my work here" pic.twitter.com/oQ0JyNF2LY
— ANI (@ANI) August 12, 2022
மேலும் படிக்க: 5-வது முறையாக கூட்டணியில் பிளவு : 8-வது முறையாக முதலமைச்சரான நிதிஷ்குமாரின் கதை
மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோரை குறிவைத்து பேசிய நிதிஷ் குமார், கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்கள், எங்களுக்கு எதிராக ஏதாவது பேசினால், கட்சியில் ஏதாவது பலன் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசிவருகிறார்கள் என்றார்.
JD(U) உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜக தற்போது நிதிஷ் மீது பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது. அதாவது பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பீகாரில் PFI மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, நிதிஷ் அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. PFI மீது நடவடிக்கை எடுப்பது நிதிஷ்குமார் விரும்பவில்லை, நிதிஷ்குமார் ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் அதிகம் நெருக்கமாக இருப்பதாக பாஜகவும் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பீகாரில் நிலவும் வகுப்புவாதப் பதற்றம், கூட்டணி முறிவதற்கு ஒரு காரணம் என நிதிஷ் கூறியதை அடுத்து, நிதிஷ் மீது பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா; பாஜக உறவை முறித்துக் கொண்டது JDU
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ